ஹிந்து தீவிரவாத அமைப்பான சிவ சேனாவின் மிரட்டல்!

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் கடந்த 1992 ஆம் ஆண்டு ஃபாஸிச வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் சரியான திட்டமிடுதலுடன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரப்படவேண்டும் என்று இந்திய முஸ்லிம்கள் ஜனநாயக முறையிலும், சட்டத்திற்க்கு உட்பட்டு பல அரப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


பாபரி மஸ்ஜித் இடித்த தினத்தன்று இந்திய நாட்டின் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் பாபரிமஸ்ஜித்தை அதே இடத்தில் முஸ்லிம்களுக்கு திருப்பி கட்டித்தரப்படும் என்று வாக்குறுதியளித்தார் அதனை நம்பிய முஸ்லிம் சமூகத்திற்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.  இறுதியாக முஸ்லிம் சமூகம் நம்பி இருந்த நீதி மன்றத்தின் தீர்ப்போ கேலிக்கூத்தாய் போனது என்பது உலகம் அறிந்த விஷயம். முகலாய மன்னர பாபர் இராமர் கோயிலை இடித்துத்தான் மஸ்ஜிதை கட்டினார் என்ற பொய் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் பரப்பி, சாதாரணமாக இருந்த இந்துக்கள் மனதில் விஷக்கருத்துக்களை பரப்பி நாட்டையே தலை குனிய வைத்த மாபெரும் ஒரு பாதகச்செயலை செய்தது இந்த ஃபாஸிச கும்பல்.

பாபரி மஸ்ஜிதை இடித்து, அதன் பிறகு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்து, பல‌ கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடிய‌ இந்த வெறிபிடித்த காவித் தீவிரவாதிகள் தான். இதை ஒரு போதும் முஸ்லிம்கள் மறக்கவும் மாட்டார்கள், செய்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானதுதானா? என்று நாம் அறிந்து கொள்ள மிகப் பெரும் சட்ட மேதையாகவோ அல்லது மூத்த வழக்கறிஞராகவோ இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, மாறாக நடு நிலையாக சிந்திக்கும் பக்குவம் மட்டும் இருந்தால் போதுமானது இந்த தீர்ப்பு எப்படி பட்ட தீர்ப்பு என்று நாம் அறிந்து கொள்ளலாம்.

அயோத்தியில் அந்த குறிப்பிட்ட இடத்தில் இராமர் கோயில் இருந்ததாகவோ அல்லது இராமர் கொயிலை இடித்துத்தான் பாபரி மஸ்ஜிதை கட்டினார் என்றோ எந்த ஒரு ஆதாரத்தையும் நீதிமன்றத்திலே அவர்கள் நிரூபிக்கவில்லை. மேலும் அகழ்வாராய்ச்சியின் போதிலும் கூட பல தில்லு முல்லுகள் நடைப்பெற்று பல்வேறு ஆதாரபூரவமான  விஷயங்களை மறைத்தனர்.. முஸ்லிம்களோ தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பி இருந்தனர். ஆனால் வந்த தீர்ப்போ கட்டப்பஞ்சாயத்து போன்றது என்று பல மூத்த வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

விஷயத்திற்க்கு வருவோம், ஒரு வாதத்திற்க்காக பாபர் இராமர் கோயிலை இடித்துத்தான் பள்ளியை கட்டினார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் தீர்ப்பு எவ்வாறாக இருந்திருக்க வேண்டும்? ஒன்று அது இராமர் கோயில் இல்லையென்றால் அது பாபரி மஸ்ஜித்திற்க்கு உண்டான இடம் என்றல்லவா தீர்ப்பு வந்திருக்கவேண்டும்.

பாபர் இராமர் கோயிலை இடித்துதுதான் பள்ளியை கட்டினார் என்றால் முஸ்லிம்களுக்கு ஏன் ஒரு பங்கு நிலத்தை ஒதுக்க வேண்டும்? அப்படி இல்லையென்றால் பாபரி மஸ்ஜிதி இருந்த இடத்தை மூன்று பங்காக பிரித்து அதில் 2 பங்கை இடித்தவர்களுக்கே கொடுத்தால் அதற்க்கு என்ன அர்த்தம்? யாரை திருப்தி படுத்துவதற்க்காக இந்த தீர்ப்பு?

ஆக இந்த முஸ்லிம் சமூகம் இருதிவரை சட்டத்திற்க்கு உட்பட்டு சட்டத்தை மதித்து தங்களுடைய போராட்டங்களை தொடரும். அதே வேலையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கொஞ்சம்கூட மதிக்காத, இந்தியாவில் மத உணர்வுகளை தூண்டி அதன் மூலம் நாட்டை துண்டாட நினைக்கும் ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக இந்த தீர்ப்பு வந்திருந்தால் இந்த நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்? யோசித்துப் பார்க்கவேண்டும்.

முழுக்க முழுக்க ரவுடித்தனத்தையும், மொழி உணர்வை தூண்டி குளிர் காயும் சிவசேனா தீவிரவாதிகள் சென்னையில் ஒரு சுவரொட்டியை ஒட்டி உள்ளனர். அதில் இவர்கள் யார் இயற்றிய சட்டத்தை மதிக்கவில்லையோ அந்த டாக்டர் அம்பேத்கருடைய புகைப்படத்தை போட்டு தங்களை யோக்கியர்கள் என்று நிரூபிக்க முயல்கின்றனர்.

இதோ அவர்களது சுவரொட்டியின் வாசகம்:

"அயோத்தியில் இராமபிரான் பிறந்த மண்ணில் 3ல் ஒரு பகுதியை அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பெற்றுக்கொண்டும் நீதி மன்ற தீர்ப்பையும், நீதிமன்றங்களையும், மாண்புமிகு நீதிபதிகளையு, சட்டங்களையும் அவமதிக்கும் வகையில் சுவரொட்டி, பேனர்கள் மூலம் அவதூறு செய்தும், மத‌ நல்லிணக்கத்தை குலைத்தும் நீதிமன்றங்கள் முற்றுகை போராட்டம் என கொக்கரித்துவரும் தேச விரோத முஸ்லிம் வெறியர்களின் செயல் சட்ட மரியாதை, அரசியலமைப்பு தந்தை டாக்ட. அம்பேத்கர் அவர்களின் அரசியலைமைப்பு சட்டத்திற்க்கு எதிரானதாகும். சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட‌ தேச விரோத முஸ்லிம் மத வெறியர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!

இந்துக்களின் பொறுமையை சோதிக்காதீர்!"


மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவர்களை போன்ற தீய சக்திகளை எதிர்த்து போராட வேண்டும்.

Popular Front - Harbour

Related

Siva sena 8214816280793396538

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item