ஈரான்:எதிரிகளின் எண்ணம் நிறைவேறாது - அஹ்மத் நஜாத்

ஈரானுக்கு எதிரிகள் இருப்பது உண்மைதான். காரணம், உலக நாடுகளுக்கு மத்தியிலான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும், சிகரங்களை நோக்கி முன்னேறவும் ஈரான் முயல்கிறது.
ஈரான் அரசுடனான கடுமையான விரோதம் கொண்டவர்கள் இங்குள்ளனர். ஆனால், அவர்களின் லட்சியம் நிறைவேறாது என அஹ்மத் நஜாத் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஈரானில் நடந்த அரசுக்கெதிரான போராட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.
செய்தி:மாத்யமம்