ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது - ஜீன் ஷார்ப்

துனீசியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் எழுச்சி அரபுலகத்தை ஆட்டிப் படைக்கிறது. இவ்வேளையில் மக்கள் புரட்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது எது? என்பதுக் குறித்து பலத்த விவாதம் நடைப்பெற்று வருகிறது.

இவ்வேளையில் மக்கள் எழுச்சிக்கு உரிமைக் கொண்டாட நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய பத்திரிகைகள் ஜீன் ஷார்ப்பை முன்னிறுத்தியுள்ளன.

யார் இந்த ஜீன் ஷார்ப்?
83 வயது பேராசிரியர். தற்போது போஸ்டனில் தனது சிறிய வீட்டில் ஐன்ஸ்டைன் இன்ஸ்ட்யூட் என்றதொரு நிறுவனத்தை நடத்திவருகிறார். ஏகாதிபத்தியவாதிகளை எவ்வாறு எதிர்கொள்வது? என்பதுதான் ஷார்ப்பின் பிரதான ஆராய்ச்சி.

ஏகாதிபத்தியவாதிகளை மிகவும் பலனளிக்கும் வகையில் எதிர்கொள்ள மக்கள் தங்களின் பயத்தை கைவிட வேண்டும் என ஷார்ப் கூறுகிறார். தங்கள் வசமிருக்கும் ஆயுத பலம்தான் ஏகாதிபத்தியவாதிகளை நிலைக்கொள்ள வைக்கிறது. பயம் மக்களை விட்டு அகன்றுவிட்டால் ஏகாதிபத்தியவாதிகளின் நிலைமை பரிதாபகரமானது என்கிறார் ஜீன் ஷார்ப்.

இவர் சில கையடக்க புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில் பிரபலமானது 93 பக்கங்களைக் கொண்ட 'ஃப்ரம் டிக்டேட்டர் ஷிப் டூ டெமோக்ரெஸி' என்ற நூலாகும். உலகின் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இந்நூல் போராட்டக் களங்களில் எவ்வாறு எதிர்ப்பை வலுப்படுத்தலாம் என்பதில் செயல்ரீதியான வழிமுறைகளைக் குறித்து விவாதிக்கிறது.

இணையதளத்தில் இந்நூல் இலவசமாக கிடைக்கிறது. ஷார்ப்பின் சித்தாந்தம் எல்லாம் சரிதான்! ஆனால், ஃப்ரன்ஸ் ஃபானன் முதல் அலி ஷரீஅத்தியும், ஆயத்துல்லாஹ் கொமைனி உள்பட புரட்சியாளர்களின் போராட்ட பூமியில் மக்களுக்கு உத்வேகமளிக்க ஒரு அமெரிக்க பேராசிரியரின் புத்தகமா கிடைத்தது? என்ற நியாயமான சந்தேகம் பலருடைய மனதிலும் எழுந்துள்ளது.

செய்தி:தேஜஸ்

Related

egypt 7566978301183215899

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item