பாகிஸ்தான் அடுத்த எகிப்தாக மாறும் - இம்ரான் கான்

மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சி போராட்டங்கள் ஜனநாயகத்தை கசாப்புச் செய்யும் ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இத்தகைய எழுச்சிப் போராட்டங்கள் தனது நாடான பாகிஸ்தானிலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் நிலைமை மிக மோசமானதாக உள்ளது. ஒரே நேரத்தில் நல்லதும், கெட்டதுமான காலக்கட்டத்தில்தான் எனது நாடு கடந்து செல்கிறது என இம்ரான்கான் ஆதங்கத்தோடு கூறுகிறார்.

அரசியலில் பிடிப்புள்ளவர்கள்தான் மக்கள். பத்திரிகைகளும் வலுவாகத்தான் உள்ளன. ஆனால், அரசோ யாருக்கோ வேண்டி கைப்பாவையாக விளையாடிக் கொண்டிருக்கிறது. சொந்த நாட்டுக் குடிமக்களை துப்பாக்கிக்கு பலியாக்குகின்றது. எல்லைமீறிய ராணுவ நடவடிக்கைகள் மூலமாக பாக்.தாலிபான் உருவாகியுள்ளது என தெரிவித்த இம்ரான்கான், பாகிஸ்தானில் மக்கள் எழுச்சிப்போராட்டம் வெடித்துக் கிளம்பினால் தான் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் பக்கம் நிற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Related

pakistan 3479238794743917073

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item