பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: 5 பேர் பலி

துனீசியா,எகிப்தை தொடர்ந்து மக்கள் எழுச்சி தற்போது வளைகுடா நாடான பஹ்ரைனை தொற்றிக் கொண்டிருக்கிறது.

பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமி போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கில் குழுமிய போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர். அந்த மோதலில் 5 பேர் இறந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெறும் இந்த போராட்டத்தில் அரசுக்கு எதிராக வைக்கப்படும் கோரிக்கை என்னவென்றால் அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்பதே.

ஏற்கனவே எகிப்திலும், துனிஷியாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து அந்நாட்டு அதிபர்களை பதவியிறக்கத்திற்கு வழிவகுத்த போராட்டங்களின் சாயல் இப்போது இங்கே இருக்கிறது. லிபியாவிலும் மக்கள் எழுச்சி பரவி வருகிறது.

பஹ்ரைனில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இப்ராஹீம் ஷெரீப் தலைமையிலான செக்யூலர் வாத் கட்சி நடத்துகிறது.

பஹ்ரைனில் ஏற்பட்ட அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அமெரிக்காவுக்கு சற்று எரிச்சல் தரும் அம்சம். அமெரிக்காவின் ராணுவ கூட்டாளி பஹ்ரைன். இங்குள்ள கடற்பகுதியில் அமெரிக்காவின் ஐந்தாவது கப்பல் படைத்தளம் நிரந்தரமாக இருக்கிறது.

பஹ்ரைனில் வாழும் மக்கள் பெரும் பகுதியினர் ஷியா முஸ்லிகள். ஆனால் ஆட்சியாளர்கள் சன்னி முஸ்லிம்கள். கடந்த 200 ஆண்டுகளாகவே இங்கு மெஜாரிட்டி இல்லாத பிரிவினர் ஆட்சி என்பது ஒரு நெருடலாக இருந்த போதும் தற்போது ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் குரல் எழுப்பி போராட முன்வந்துள்ளனர்.

கடந்த 2002-ல் இங்கே மன்னர் தலைமையிலான சட்ட நெறிமுறை அரசு கொண்டு வரப்பட்டதே தவிர ஆட்சியில் பெரிய மாற்றமில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகரிப்பதை கண்ட பஹ்ரைன் மன்னர் ஷேக் அஹமது பின் ஈசா அலி கலிஃபா இரு நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் தோன்றி "நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்" என அறிவித்தார்.

ஆனால் அரசை எதிர்த்து மனாமாவில் உள்ள பேரள் ஸ்குயர் சதுக்கத்தில் கூடாரம் அமைத்து மக்கள் தங்கி ஆர்ப்பாட்டத்தை அஞ்சாமல் செய்து வருகின்றனர். போலீசார் அடக்குமுறை நேற்று அதிகரித்தால் இந்த மோதலில் 5 பேர் உயிரிழக்க நேரிட்டது என்றும், காயம்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ரத்தம் தர மக்கள் கூட்டமாக வந்தபோதும் அதை போலீசார் தடுத்தது மக்களை ஆத்திரமடைய செய்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
பாலைவனதூது  

Related

peoples 7421434961433312713

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item