SDPI சார்பாக நடைபெற்ற ஈகைப்பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
http://koothanallurmuslims.blogspot.com/2010/09/sdpi.html
ஈகைப்பெருநாளில் (ரம்ஜான்) மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 17-09-2010 அன்று சென்னை ஹோட்டல் பிரஸிடெண்டில் இரவு 7 மணிக்கு K.S.M.தெஹ்லான் பாகவி [மாநில தலைவர் - SDPI] தலைமையில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் அ.பக்ருதீன், மாநில துணைத் தலைவர் எ.எஸ். இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், தொல். திருமாவளவன் முதல் பல மாற்றுமத அரசியல் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.