ஈரான் ஒரு மாபெரும் சக்தி என்பதை ஒப்புக்கொள்ள அமெரிக்கா தயாராகவேண்டும்

எதிர்காலம் ஈரானுக்குத்தான். உலகில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை அங்கீகரிக்க அமெரிக்க தயாராக வேண்டும் எனவும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா வருடாந்திர பொது சபையில் பங்கெடுக்க அமெரிக்காவிற்கு சென்றுள்ள நஜாத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்தான் இதனை தெரிவித்துள்ளார்.

தனது அரசு அணுஆயுதத்தை நிர்மாணிக்க விரும்பவில்லை.அணு ஆயுதமில்லாத மைதியான உலகம்தான் ஈரானின் கனவு.அணுசக்தித் தொடர்பான பேச்சுவார்த்தை எப்பொழுது மீண்டும் துவக்கப்படும் என்றக் கேள்விக்கு நஜாத் பதிலளிக்கவில்லை. தடை ஈரானை எவ்விதத்திலும் பாதிக்காது என நஜாத் தெரிவித்தார்.

ஈரான் அதிபரான பிறகு 7-வது முறையாக அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளார் நஜாத். ஈரான் ஒரு மாபெரும் சக்தி என்பதை ஒப்புக்கொள்ள அமெரிக்கா தயாராகவேண்டும். மனித வளமும், நாகரீக பலமும் கொண்ட ஒரு தேசம் என்ற நிலையில், இதர நாடுகளை நட்புறவாகவே ஈரான் கருதுகிறது. எந்த நாட்டின் மீதும் ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, எந்த நாட்டின் உரிமைகளை பறிக்கவோ நாங்கள் முயன்றதில்லை. எங்களுடன் பகைமைக்கு முயல்பவர்களும், எதிர்கால நட்புறவு வாய்ப்பை தகர்ப்பவர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும், எதிர்காலம் ஈரானுக்கே!

பகை எந்த பலனையும் தராது. எதிர்கட்சிகளுக்கோ, பத்திரிகைகளுக்கோ ஈரானில் எவ்வித கட்டுப்பாடும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு நஜாத் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது - Koothanallur Muslims

Related

islam 5455744585744186282

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item