குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் காவி பயங்கரவாதிகள்தான் உள்ளனர்: ப.சிதம்பரம் உறுதி

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகம் மூலம் தேசத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வலதுசாரி மத அடிப்படைவாதிகள்தான் செயல்பட்டுள்ளனர் என்ற செய்தியை அளிப்பதற்கான தனது முயற்சி வெற்றிப்பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையல்ல,மாறாக நான் கூறிய செய்திதான் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின்பொழுது பத்திரிகையாளர்களிடம் உரையாடினார் அவர்.

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை வாபஸ் வாங்க மறுத்த ப.சிதம்பரம் அதனைக் குறித்து மேலும் விளக்கமளித்தார்.

தேசத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வலதுசாரி பயங்கரவாதிகளின் பங்கு சந்தேகிக்கப்பட்ட சூழலில்தான் எனது காவிபயங்கரவாதம் வார்த்தை பிரயோகம் அமைந்தது. மத அடிப்படைவாதிகள் தான் இதன் பின்னணியில் உள்ளனர். இந்த செய்தி ஒரு வார்த்தை பிரயோகத்தின் மூலம் நஷ்டமடைந்துவிடக் கூடாது. ஆனால், எனது காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகம் எனது செய்தியை நன்றாக பிரதிபலித்துள்ளது.

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தில் உறுதியாக இருக்கின்றீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ப.சிதம்பரம் இவ்வாறு பதிலளித்தார்.

"காவி பயங்கரவாதம் என்ற வார்த்தைக்கான காப்புரிமையைக் குறித்து உரிமைக் கொண்டாட எனக்கு உரிமை இல்லை. ஏனெனில், இவ்வார்த்தை பிரயோகத்தை முதன்முதலில் பயன்படுத்தியது நான் அல்ல. மத்திய அமைச்சர்கள் பலரும் இதற்கு முன்பு இவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு பாடப்புத்தகங்களில் காவிமயம் என்பதுக் குறித்து விவாதம் பாராளுமன்றத்தில் நடந்துள்ளது." என்ற ப.சிதம்பரத்திடம், பத்திரிகையாளர்கள், காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்திற்கு காங்கிரஸ் கட்சியிலேயே மாற்றுக் கருத்து ஒலிக்கிறதே என்றுக் கேட்டதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், இவ்விஷயத்தில் கட்சியின் நிலைப்பாடுதான் முக்கியம் என தெரிவித்தார்.

ஏற்கனவே இதனைக்குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் திரிவேதி கருத்துத் தெரிவிக்கையில், காவியல்ல பிரச்சனை, பயங்கரவாதம்தான் பிரச்சனை என்றும், பயங்கரவாதத்திற்கு கறுப்பைத் தவிர வேறு நிறங்கள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ப.சிதம்பரத்தின் கருத்திற்கு திக் விஜய்சிங்க்கும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
பாலைவனதூது - Koothanallur Muslims

Related

RSS 2861799657896495160

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item