முத்துப்பேட்டை நகரில் மாற்றுப் பாதையை மாற்ற முயற்சித்த BJP முறியடித்த INTJ
2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஊர்வலத்தின் போது பெரும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பள்ளிவாசலில் நோன்பு திறப்பிற்காக காத்திருந்த மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.பூட்ஸ் கால்களுடன் பள்ளிவாசலுக்குள் புகுந்து காவல் துறையினர் நோன்பாளிகளை தாக்கியது தமிழக முஸ்லிம் கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஆறாத காயத்தை உருவாக்கிய முத்துப் பேட்டை கலவர சம்பவங்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களின் உதவியோடு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி களால் மாற்றுப் பாதைக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது. மாற்றுப் பாதைக்கான வரைபடத்தின் அடிப்படையில் விநாயகர் ஊர்வ லம் நடத்தப்படுவது ஒன்றே அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழியாக அமையும் என்பதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக கூடுதல் டிஜிபி, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முத்துப்பேட்டை முஹம்மது ஷிப்லி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முத்துப்பேட்டையில் கலவரம் உருவாகாமலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் விநாயகர் ஊர்வலத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி ஹேமந்த் லஷ்மண் கோகலே, நீதிபதி டி. முருகேசன் ஆகியோர், “”மனுதாரர் முன் வைத்திருக்கும் மாற்றுப் பாதையை ஆய்வு செய்ய வேண்டும் என்று,ம் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து ஆலோசனை செய்து மாற்றுப் பாதை குறித்த அவசியத்தை விளக்கி சுமூகமாக ஊர்வலம் செல்ல அனைத்து நடடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும்” என்ற ஆலோசனை வழங்கி தீர்ப்பளித்தனர். அனைத்துத் தரப்பினரையும் அழைத்து ஆலோசனை செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர், “”முஹம்மது ஷிப்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஊர்வல வரை படத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்து, ஜாம்வனோடையில் இருந்து புறப்படும் ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்டு, புதுப் பள்ளிவாசல், பட்டுக்கோட்டை ரோடு வழியாக பாமினி ஆற்றில் சிலைகளை கரைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனடிப்படையில் சென்ற ஆண்டு சின்னச் சின்ன சம்பவங்களைத் தவிர பெருமளவு அசம்பாவிதம் இல்லாமல் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களே இருந்த நிலையில் பாஜக கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் சி. ராமலிங் கம் என்பவரால் திடீரென்று புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பழைய பாதையில் மீண்டும் ஊர்வலம் கொண்டு செல்வதற்கு தமிழக முதன்மைச் செயலாளர், தமிழக உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குனர், கூடுதல் காவல்துறை இயக்குனர் (சட்டம் – ஒழுங்கு), மாவட்ட ஆட்சியர், மவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், முத்துப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தடுக்காதவாறு இடைக்காலத் தடையாணை வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.
செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டு 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே சென்ற ஆண்டு முத்துப்பேட்டை ஊர்வலம் குறித்து வழக்கு தொடர்ந்தவர் என்ற அடிப்படையில் முஹம்மது ஷிப்லிக்கு எந்த நோட்டீஸýம் வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் வழக்குத் தொடரப் பட்டுள்ள தகவல் கிடைத்தவுடன், இந்த வழக்கில் முஹம்மது ஷிப் லியை இன்னொரு மனுதாரராக சேர்க்கும்படி மனு கொடுத்து வழக்கை நடத்த வேண்டுமென்று ஐஎன்டிஜே தலைமை முடிவு செய்தது.
இந்த வழக்கு செப்டம்பர் 8ஆம் தேதி காலை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. அப்போது முஹம்மது ஷிப்லியின் சார்பாக வழக்கறிஞர் காசிநாத பாரதியும், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரனும் ஆஜராகினர். பழைய பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழாமல் முத்துப் பேட்டையில் அமைதி நில வேண்டு மென்றால் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி டிவிஷன் பெஞ்ச் வழக்கிய தீர்ப்பை நடை முறைப்படுத்த வேண்டுமென்றும் வாதாடினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தது என்றும், மாவட்ட ஆட்சியர் அனைத்துத் தரப்பினரை யும் அழைத்துப் பேசி சுமூகமாக ஊர்வலத்தை கொண்டு செல்ல ஊர்வலப் பாதையை முடிவு செய்ய வேண்டும் என்றும் அந்தக் கூட்டத் தில் முடிவு எட்டப்படவில்லை என்றால் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளருடன் ஆலோசனை செய்து தேதி, நேரம் உட்பட ஊர்வலப் பாதையை முடிவு செய்யும் முழு அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு என்று கூறி தீர்ப்பு வழங்கினர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தகுந்த நேரத்தில் எடுத்த சரியான நடவடிக்கையால் முஸ்லிம்களின் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு தடையாணை வழங்கப் பெறாமல் தடுக்கப்பட்டது. (அல்ஹம்து லில்லாஹ்)
- அபு சுபஹான் ( நன்றி : மக்கள் ரிப்போர்ட் செப்டம்பர் )