மலைக்கோட்டையில் செய்ததை பாபர் மஸ்ஜிதில் செய்திருந்தால்...?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் போலீசாரின் அனுமதி பெற்ற இடத்தில் தான் நிறுவ வேண்டும். போலீசார் அனுமதி பெறாத இடத்தில் நிறுவினால் அவை உடனடியாக அகற்றப்படும். சில தினங்களுக்கு முன் கோவையில் போலீசார் அனுமதிக்காத இடத்தில் நிறுவிய விநாயகர் சிலையை அகற்றி காவல்துறை வேனில் கொண்டு சென்றதை பத்திரிக்கையில் பார்த்தோம்.

அதிகபட்சம் பத்து நாட்களில் கடலிலோ அல்லது ஏதேனும் ஒரு நீர்நிலைகளிலோ கரைக்கப்பட உள்ள விநாயகர் சிலை விசயத்தில் காவல்துறை இந்த அளவுக்கு கெடுபிடி காட்ட காரணம் அவர்களுக்கு விநாயகர் மீது பகையா என்ன..? இல்லவே இல்லை. இருந்தாலும் இவ்வாறு கண்டிப்புடன் நடந்து கொள்வதற்கு காரணம் அவரவர் நினைத்த இடத்தில் சிலை வைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புண்டு. எனவேதான் குறிப்பிட்ட இடத்தில் சிலையை நிறுவவேண்டும் என காவல்துறை கூறுகிறது. ஆதாவது நிரந்தரமாக அந்த இடத்திலேயே இருக்கப்போகாத சிலையை, பத்துநாளில் கரைக்கப்படவுள்ள சிலை விசயத்தில் சட்டம் ஒழுங்கு விசயத்தில் காவல்துறை இந்த அளவு கவனம் செலுத்துகிறது.

அதே போன்றுதான் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 1605ம் ஆண்டு இந்த மலைக்கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. ஆனால், இதற்கு முன்னரே இங்கு பத்மகிரீஸ்வரர்&அபிராமி அம்மன் கோவில் இருந்தது.

பின்னர் திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில், திண்டுக்கல் மலைக்கோட்டை போர்கருவிகள் கிடங்காகவும், வீரர்கள் பயிற்சி தளமாகவும் என்று ராணுவகேந்திரமாக மாறியது. அப்போது மலைக்கோட்டை கோவிலில் இருந்த அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் உள்ளிட்ட சாமி சிலைகளை கீழே கொண்டு வந்து, கோவில் அமைக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கிறது.
பல்வேறு இந்து அமைப்புகள் மீண்டும் மலைக்கோவிலில் அபிராமி அம்மனை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாபர் மஸ்ஜித் பாணியில் இங்கு திடீரென அம்மன் சிலையை யாரோ வைக்க , தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு பழைய பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் கோவிலின் கருவறையில் 3 அடி உயரத்தில் புதிதாக அம்மன் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொல்லியல் துறை 1958&ம் ஆண்டு சட்டத்தின்படி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை சேதப்படுத்துதல், திருத்தி அமைத்தல், புதுப்பித்தல் ஆகியவை குற்றமாகும்.

இதனால் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மன் சிலையை அதிகாரிகள் பெயர்த்து எடுத்தனர். பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகளின் காரில் சிலை, பீடம் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு செல்லப்பட்டது.

அன்பானவர்களே! மேலே நாம் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களை நன்றாக மனதில் கொள்ளுங்கள். அதாவது சில நாளில் கரைக்கப்படவுள்ள விநாயகர் சிலையை நினைத்த இடத்தில் வைக்கமுடியாது. காரணம் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை.

அதேபோல, ஏற்கனவே கோயிலாக இருந்து, சுதந்திரத்திற்கு பின்னால் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், சிலை வைக்கமுடியவில்லை. காரணம் தொல்லியல்துறையின் சட்டம்.
ஆனால், கி.பி 1538 -ல் கட்டப்பட்டு, இடிக்கப்பட்ட 1992 வருடப்படி சுமார் 454 ஆண்டுகாலமாய் பள்ளிவாசலாய் இருந்த முஸ்லிம்களின் சொத்தான, அல்ல;முஸ்லிம்களின் இறைவனின் சொத்தான பாப்ரி மஸ்ஜிதில் ஒரு கும்பல், 1949ம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி அன்று மசூதிக்குள் ராமர் சிலையை வைத்தனரே!

அன்று இந்த மலைக்கோட்டை அதிரடி நடவடிக்கை போன்று, காவிக் கும்பலால் அடாவடித்தனமாக வைக்கப்பட்ட சிலையை தூக்கிஎறிந்துவிட்டு மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் அன்றைக்கிருந்த அரசாங்கமும், காவல்துறையும் ஒப்பைடைத்திருக்குமானால், முஸ்லிம்கள் பாபர் மஸ்ஜிதை இழந்திருக்க மாட்டார்கள். அதையொட்டி, ரதயாத்திரை என்ற பெயரில் நடத்தப்பட்ட ரத்த யாத்திரையில் உயிரையும், உடமைகளையும் இழந்திருக்க மாட்டார்கள். அன்று காவிகளுக்கு கிடைத்த வெற்றியின் தொடர்ச்சிதான், நாடெங்கிலும் நடைபெற்றுவரும் முஸ்லிம் இனப்படுகொலைகள்.

ஆக, ஒன்று புரிகிறது; இந்த நாட்டில் தெருவில் ஒரு சிலை அமைக்கவேண்டுமானால் அதற்கு அனுமதி பெறவேண்டும். பழைய கோயிலில் அது அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமானால் அங்கு சிலை அமைக்கக் கூட அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால் ஒரு முஸ்லிமின் பள்ளிவாசலில் யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம். அப்படி வைத்தால், பள்ளிவாசலுக்கு சொந்தமான முஸ்லிம்களை விரட்டிவிட்டு, சிலைகளுக்கு பூஜை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்பதுதான் இந்நாட்டின் நிலை எனபதற்கு, பாபர் மஸ்ஜித் விஷயத்தையும்- திண்டுக்கல் மலைக் கோட்டை விஷயத்தையும் ஆய்வு செய்தால் புலப்படுகிறது.

எது எப்படியோ, பாபர் மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு எதிர்வரும் தீர்ப்பாவது மருந்தளிக்குமா என்று பார்ப்போம்.

நிழல்களும் நிஜங்களும்
Koothanallur Muslims

Related

INDIA 2350608308750552141

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item