பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே .

அனைத்து சமுதாய மக்களும் அமைதிகாத்து, நல்லிணக்கம் பேண வேண்டும் என பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது. வதந்திகள்,உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

எனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்

1.வதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்.
2.மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ, செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே.
3.முஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்.
4.ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்.
5.இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்
6.நீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது

அமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Koothanallur Muslims

Related

SDPI 4453051615368977819

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item