மத்தியபிரதேசில் 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தேர்வு: அதிர்ச்சித் தகவல்

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருக்கும் சூழலில் இந்தியாவில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்திக் கொண்டிருக்கும் வேளையில் ராஜேஷ் பிட்கார் என்பவர் இந்தியாவை ஹிந்து தேசமாக மாற்ற 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேர்வுச் செய்துவருகிறார் என்ற அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளின் தேர்வுக்குப் பெயர் ஹிந்து யோத்யா பாரதி அபியான் என்று பெயராம்.

இதில் அதிர்ச்சித்தரும் தகவல் என்னவெனில், இந்த பயங்கரவாதிகளின் நேர்முக தேர்வு நான்கு சுவற்றிற்குள் ரகசியமாக நடைபெறவில்லை என்பதுதான்.
ஆம்!, வெட்ட வெளிச்சமாக இந்த தேர்வு நடந்துவருகிறது. இந்த ஹிந்து யோத்யா பாரதி அபியானுக்கு தலைமை வகிக்கும் ராஜேஷ் பிட்கார் என்பவரும், அதன் வழிகாட்டிகளில் ஒருவரான தாமோதர் சிங் ஜி ஜாதவ் என்பவரும் வெளிப்படையாகவே பொதுமக்களுக்கு பயங்கரவாத நேர்முகதேர்வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்களை பயங்கரவாத நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள் மத்தியபிரதேச மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக டெல்லியைச் சார்ந்த சுதந்திர பத்திரிகையாளரான விஜய் பிரதாப் ஒரு தகவலை தெரிவிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி பயங்கரவாத தேர்வை நடத்தும் ராஜேஷ் பிட்கார் விஜய் பிரதாபை அழைத்துள்ளார். இவருடனான கலந்துரையாடலின் பொழுது, பயங்கரவாதிகளின் தேர்வை ஒப்புக்கொண்ட ராஜேஷ் பிட்கார் தங்களின் நோக்கம் ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதுதான் என்பதையும் தெரிவித்துள்ளார்.

"இந்த இயக்கம் இளைஞர்களின் இயக்கம். இது தீவிர சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும்." என்று கூறியுள்ளார் ராஜேஷ் பிட்கார்.

தங்களது இயக்கத்தின் பணிகளைக் குறித்து ராஜேஷ் பிட்கார் கூறுகையில், "நாங்கள் 10 ஆயிரம் பேரைக் கொண்ட தீவிரவாத இயக்கத்தை உருவாக்குகிறோம். நாங்கள் இதர இயக்கங்களைப் போன்று அல்ல." என்கிறார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக் குறித்து கூறுகையில், "இது தேசத்தின் பெருமை சார்ந்த ஒன்று. எங்கள் இயக்கம் இவ்விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பணியை ஆற்றும்" என்கிறார்.

தற்பொழுது நமது கேள்வி என்னவெனில் மத்திய-மாநில அரசுகள் இத்தகைய பகிரங்கமாக செயல்படும் பயங்கரவாதிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்?

செய்தி:twocirlces.net
பாலைவனதூது - Koothanallur Muslims

Related

RSS 1840688780391106328

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item