அயோத்தி விவகாரத்தில் கை கட்டி நிற்காது ஆர்.எஸ்.எஸ் : திக்விஜய் சிங் கருத்து


காங்கிரஸ் பொதுச்செயலரும், உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான திக் விஜய்சிங் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் அயோத்தி தீர்ப்பு வரும் போது ஏதாவது செய்வர். எனவே காங்கிரஸ் எம்.பி,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தொகுதியிலேயே இருந்து சமூக நல்லிணக்கத்தை காக்க அறிவுறுத்தியுள்ளோம்." இவ்வாறு திக் விஜய்சிங் கூறினார்.
இதனிடையே, அயோத்தி தீர்ப்பை ஒட்டி பாதுகாப்பிற்கு மத்திய அரசு அனுப்பிய துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை குறைவானது என்று உ.பி., முதல்வர் மாயாவதி புகார் கூறினார்.
Koothanallur Muslims