பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு; கலவரம் உண்டாக்க ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் சதி

http://koothanallurmuslims.blogspot.com/2010/09/blog-post_15.html

அயோத்தியில் ஹிந்து தீவிரவாதிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு,அதை தொடர்ந்து ஹிந்து தீவிரவாதிகள் ஏற்படுத்திய மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியானதையடுத்து அப்போது பிரதமராக இருந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மறைமுக உறுப்பினர் நரசிம்ம ராவ், மசூதிக்கு உரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.
இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட லக்னெள நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை ஏற்று கொள்ள மாட்டோம் என்று ஹிந்து தீவிரவாத இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை அறிவிக்கவுள்ள 3 நீதிபதிகளுக்கும் சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அவர்களது கார்களுக்கு முன்னும், பின்னும் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் வாகனம் செல்கின்றன.
நீதிபதிகளின் வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று அலகாபாத் நீதிமன்றம் பாதுகாப்புப் படை வீரர்களின் முற்றுகையில் இருக்கும்.
அலகாபாத்தில் ஹிந்து தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலை செய்து விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தீர்ப்பு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் எங்கெங்கு போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை ஒரு எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மீரட் நகரில் அதிகபட்ச கலவரம் உண்டாகலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியாக இன்னும் 9 நாட்களே இருப்பதால் நாளை முதல் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கானவர்கள் கைதாகும் பட்சத்தில் சிறைகளில் இட பற்றாக்குறை ஏற்படும் என்பதால் உத்தரபிரதேசம் முழுவதும் போலீசார் தற்காலிக சிறைகளை உருவாக்கி வருகின்றனர். இந் நிலையில் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Koothanallur Muslims