கஷ்மீரிகளின் சுதந்திர தாகம் ஆழமானது: சீதாராம் யெச்சூரி

http://koothanallurmuslims.blogspot.com/2010/09/blog-post_6837.html

மத்திய அரசு கஷ்மீருக்கு அனுப்பிய அனைத்து பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றிருந்த தனது கஷ்மீர் அனுபவங்களைக் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
"தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியுடனான சந்திப்பு அவநம்பிக்கையின் பனிமூட்டத்தை நீக்குவதாகயிருந்தது. நாங்கள் அவருடைய வீட்டிற்கு செல்வோம் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். எங்களை வரவேற்றதற்கு அவருக்கு உருதுமொழியில் நன்றி தெரிவித்தேன்.
ஊரடங்கு உத்தரவினால் பால் கிடைக்காததால் தங்களுக்கு தேநீர் தர இயலவில்லை என கிலானி தெரிவித்தார். பரவாயில்லை, பாலில்லாத தேநீரை நாங்கள் அருந்துகிறோம் என நாங்கள் தெரிவித்தோம்.
மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் அஸாஸுத்தீன் உவைஸி, அகாலிதளின் ரத்தன்சிங் அஜ்னாலா, தெலுங்கு தேசம் கட்சியின் நாம நாகேஷ்வரராவ், தி.மு.கவின் டி.ஆர்.பாலு ஆகியோர் எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
40 நிமிடங்கள் கிலானி எங்களுடன் உரையாடினார். எங்களிடையேயான உரையாடலை கேமராவில் படம் பிடிக்கவேண்டும் என அவர் கோரினார். தனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தவும், அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை கூறவும் கேமராவில் படம் பிடிக்க அவர் கோரியிருப்பார் என நான் கருதுகிறேன்.எங்களுக்கு அதில் எவ்வித பிரச்சனையுமில்லை. கஷ்மீருக்கு சுதந்திரம் அளிக்கவேண்டும் என்றார் அவர் ஆவேசத்தோடு.
Koothanallur Muslims