பாபரி வழக்கில் 30ம் தேதி மாலை 3.30க்கு தீர்ப்பு
பாபரி மஸ்ஜித் வழக்கில் வரும் செப்டம்பர் 30ம் தேதி மாலை 3.30 மணிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாபரி மஸ்ஜித் வழக்கில் கடந்த செப்டம்பர் 24 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு முதலில் அறிவித்திருந்தது. தீர்ப்ப வழங்குவதை ஒத்தி வைத்து சமாதானத்திற்கான வழியை காண வேண்டுமென ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் தொடுக்க வழக்கையும் அது நிராகரித்தது. ஆனால் திரபாதி உச்சநீதிமனற்த்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ். ராதகிருஷ்ணன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இருத்தரப்பினர் இடையே சமரசமாக பேசி இப்பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று மனு செய்துள்ள திரிபாதி என்பவரின் சார்பாக வழக்குறைஞர் முக்குல் ரஸ்தோகி தனது வாதத்தை எடுத்து வைத்தார். இதற்கு பிறகு சுன்னத்தி வக்ப் வாரியம் சார்பாக மூத்த வழக்குறைஞர் ஏ. சௌத்திரி மற்றும் ஹிந்து தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் இந்த பிரச்னைக்கு நீதிமன்றத் தீர்ப்பு தான் வழி என்றும் தீர்ப்பை ஒத்தி வைக்க கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தீர்ப்பை ஒத்திவைத்தால் நாட்டில் நீதிமன்றங்கள் ஒரு பிணை கோரும் வழக்கிலும் தீர்ர்பு வழங்க இயாலது போய்விடும் என்று கூறினார்கள். பிறகு மத்திய அரசு சார்பாக தலைமை வழக்குறைஞர் குலாம் வாஹனவதி இருத்தரப்பும் சமசத்திற்கு தயார் என்றால் மத்திய அரசு அதற்கு உதவிடும் என்றும் இதற்கு இருத்தரப்பினரும் உடன்படிவில்லையெனில் தீர்ப்பு வழங்குவது தான் சரி என்றும் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதன் பிறகு நீதிபதிகள் உணவு இடைவேளைக்கு பிறகு பாபரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்க விதித்திருந்த தடையை நீக்குவதாக ஒரு வரியில் தீர்ப்பு வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து பாபரி வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்க இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வரும் வியாழன் மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று இப்போது தெரிய வருகின்றது. இந்த தீர்ப்பின் நகல் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் இணையத்தளத்திலும் அன்று வெளியிடப்படும் என்று தெரிகின்றது. அன்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வளாகத்தில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பாரகள்.
TMMK INFO
சேவ்ராய் பரக்கத் அலி-
ReplyDeleteபாபரிமஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் இரு தரப்பினரில் எவருக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தாலும் இருதரப்பினரும் அமைதிகாக்க வேண்டும்.
எவர்கள் (நம்முடைய தீர்ப்பை) நிராகரித்து நம்முடைய வசனங்களை பொய்யாக்குகின்றார்களோ அவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு. (அல்-குர்ஆன்)