மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாலேகான் குண்டுவெடிப்பு பெண் தீவிரவாதி மும்பை சிறைக்கு மாற்றம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நேற்று மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பெண் தீவிரவாதி பிரக்யாசிங் நாசிக்கில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில் இவ் வழக்கை மீண்டும் மொக்கா சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் மும்பை சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். ஆனால் பிரக்யாசிங் தன்னை நாசிக் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார். மொக்கா கோர்ட் சிறப்பு நீதிபதி இக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அதோடு பிரக்யா சிங்கை உடனே பைகுலா பெண்கள் சிறைக்கு மாற்றும்படி உத்தரவிட்டார். மேலும் டாக்டர்கள் பிரக்யாசிங்கை சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தேவைப்பட்டால் ஜே.ஜே.மருத்துவமனை அல்லது மும்பையில் உள்ள வேறு ஏதாவது ஒரு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கலாம் என்றும் நீதிபதி உத்தர விட்டார்.

இதையடுத்து பிரக்யாசிங் நாசிக்கில் இருந்து மும்பை கொண்டுவரப்பட்டார். ஆம்புலன்சில் கொண்டு வரும் போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. இதை யடுத்து இகத்புரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறிது நேரம் சேர்த்து சிகிச்சை பின் அங்கிருந்து நேற்று காலை மும்பை அழைத்துவரப்பட்டு, ஜே.ஜே.மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவனதூது - கூத்தாநல்லூர் முஸ்லீம்கள்

Related

RSS 7638136968293903844

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item