சமாதான காலக்கட்டத்தில் நடந்தது 6541 மதக் கலவரங்கள்

பாப்ரி மஸ்ஜிதுடன் தொடர்புடைய மதக் கலவரங்களுக்குப் பிறகு பொதுவாகவே அமைதியான காலக்கட்டமாக கருதப்பட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே 6541 கலவரங்கள் நடைப்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கலவரங்களில் 2234 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21,460 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

2001 முதல் 2009 வரையிலான காலக்கட்டங்களில்தான் இவ்வளவு கலவரங்களும் நடந்தேறியுள்ளன. இதில் மிக அதிகமாக 2008 ஆம் ஆண்டு கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. 943 கலவரங்களாகும் அவை.

ஆனால் அதிகம்பேர் கொல்லப்பட்டது குஜராத் இனப் படுகொலையின் போதுதான். 1130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், 2500 பேர் மட்டும் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகயிருக்கும்.

மதக் கலவரங்களை அரசு அலட்சியமாக கருதிவிட்டு குண்டுவெடிப்புகளில் அதிகம் கவனம் செலுத்தும் வேளையில் குண்டுவெடிப்புகளை விட கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2001 ஆம் ஆண்டிற்கு பிறகு 28 பெரிய குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் கொல்லப்பட்டவர்கள் 990 பேர். 2791 பேருக்கு காயமேற்பட்டது.

அதேவேளையில், வருடத்திற்கு சராசரியாக 600 மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை தீவிரமான 90 களில் மதக் கலவரங்கள் சாதாரணமாக நடைப்பெற்றாலும் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு பொதுவாகவே சமாதானமான காலக்கட்டமாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மைக்கு புறம்பானது என்பதை உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெளிவாக்குகின்றன.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 4375 ஆகும். ஆனால், இது பத்தாயிரத்தைத் தாண்டும் என சில அமைப்புகள் கூறுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

RSS 7173268611492246376

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item