ஈரானை தாக்கினால் இஸ்ரேலுக்கு அழிவுதான்: அஹ்மத் நஜாத்

இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது இஸ்ரேலின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கத்தர் நாட்டிற்கு சுற்றுப்பயணமாக வருகை புரிந்த அவர். ஈரானுக்கெதிராக இஸ்ரேல் செயல்பட்டால் அது சியோனிஷத்திற்கு நாசத்தை விளைவிக்கும் என்றார்.

கத்தர் நாட்டின் அதிபர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல்தானியுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்தார் அஹ்மத் நஜாத்.

மேலும் அவர் கூறியதாவது:"இப்பகுதியில் அணுசக்தி விவரங்களை வெளிப்படுத்தாமல் செயல்படும் ஒரேநாடான இஸ்ரேலின் தாக்குதலை தடுப்போம். அனுமதியில்லாமல் எந்தவொரு நாட்டையும் இப்பகுதியில் தாக்குவதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும்
துணியுமென்றாலும் தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. தாக்குதல் தொடங்கினால் ஈரான் பலமாக பதிலடிக் கொடுக்கும். ஈரானுக்கெதிரான போர் என்பது மனோவியல் நிர்பந்த தந்திரமாகும். அமெரிக்காவின் முயற்சியில் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் சமாதானப் பேச்சுவார்த்தை ஒரு எதிர்பார்ப்பையும் வழங்கவில்லை. இது ஜீரணமான ஒன்றாகும்." இவ்வாறு நஜாத் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

Isreal 6334586082495163887

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item