பாப்ரி மஸ்ஜித்:முஸ்லிம்கள் அமைதிகாக்க வேண்டும்- முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பு வரும் வேளையில் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும் முஸ்லிம்கள் அமைதிகாக்கவேண்டுமென அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தின் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைவர் எ.இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் த.மு.மு.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில பொதுச்செயலாளர் பக்ருத்தீன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லாஹ், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், இஸ்லாமிய இலக்கியக்கழகத் தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ், மஸ்ஜிதுகளின் கூட்டமைப்புத் தலைவர் சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர்ஃபாரூக், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தலைவர் கே.எ.மன்சூர், ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், ஜம்மியத் உலமாயே ஹிந்த் பொதுச்செயலாளர் மன்சூர், இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழக பொதுச்செயலாளர் தர்வேஷ் ரஷாதி, முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தின் முஹம்மது வலியுல்லாஹ் ரஷாதி, தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசனின் கே.எம்.இல்யாஸ் ரியாஜி, ஆல் இந்தியா மில்லி கவுன்சில் பொதுச்செயலாளர் எஸ்.எம்.அப்துல்ரஹீம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பிரசிடண்ட் அபூபக்கர், தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி ஸலாஹுத்தீன் அய்யூப் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வருகிற செப்.24 அன்று வழங்கப்படுகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கே உரிய கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் நடந்துக்கொள்ள வேண்டும்.

வழக்கு சாதகமாக இருந்தால் தனித்தனியாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். மாறாக, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வதோ, பாதகமாக இருந்தால் துவண்டுவிடவோ அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஆக்ரோஷமான செயல்பாடுகளில் ஈடுபடுவதோ கூடாது. மேலும், தீர்ப்பை தவறாக பயன்படுத்தி மஸ்ஜிதுகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் யாராவது ஈடுபட்டால் வேடிக்கை பார்க்காமல் அத்தகைய சமூக விரோத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Koothanallur Muslims

Related

TMMK 2183321442788635299

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item