16 குண்டு வெடிப்புகளுக்கு நாங்கள் தான் காரணம் - RSS பயங்கரவாதி வாக்குமூலம்

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 16 குண்டுவெடிப்புகளை காவி பயங்கரவாத இந்துத்துவ தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக வாக்குமூலங்கள் வெளிவந்துள்ளன, இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பங்கிருப்பது தெரியவந்துள்ளது,

மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2-வது மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாக, அண்மையில் தேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதி ஒருவர் இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்,

2007 ஆம் ஆண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குண்டுவைத்த ராஜேந்தர் சவுத்ரி அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் இருந்து கைது செய்யப்பட்டார், இதையடுத்தே இந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன,

இந்துத்துவா தீவிரவாத குழுக்கள் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்திவிட்ட உண்மை இந்த வாக்குமூலங்களின் வழியாக வெளிவந்துகொண்டிருக்கிறது,

2004 ஆம் ஆண்டு கஷ்மீரில் உள்ள பீர்மித்தா அஹ்லே ஹதீஸ் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் திரண்டவர்கள் மீது வெளியே இருந்து க்ரேனேடை வீசியவர்கள் தங்களின் குழுவைச் சார்ந்தவர்கள் தாம் என்பதை இந்துத்துவ தீவிரவாதிகள் தற்போதைய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் க்ரேனைடு வெடித்து 2 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

எனினும் இச்சம்பவம் காஷ்மீர் தீவிரவாதிகளின் சதிவேலையாகவே அப்போது பார்க்கப்பட்டது, தெஹ்ரீக்குல் முஜாஹிதீன் என்ற அமைப்பு இச்சம்பவத்திற்கு காரணம் என்று அன்று காவல்துறை கூறியிருந்தது.

மேற்கண்ட சம்பவம் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை கஷ்மீர் காவல்துறையினரிடம் தேசிய பாதுகாப்புப் படை கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் இந்துத்துவா தீவிரவாதிகள் குறித்து ஏதேனும் விபரங்கள் கூறப்பட்டுள்ளனவா ? என்பதை ஆராயவே இந்த அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் ஜிலானியை கொல்ல முயன்றது உள்ளிட்ட வழக்குகளில் இந்துத்துவத்திற்க்கு தொடர்பிருப்பதையும் ராஜேந்தர் செளத்ரியின் வாக்குமூலம் தெரிவித்துள்ளது.

Related

முக்கியமானவை 300614253019344318

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item