முஸ்லிம் உலகம் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் – அஹ்மத் நிஜாத்

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்தால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பரிகாரம் காணமுடியும் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். ஷியா-சுன்னி பிரிவினையை தீவிரப்படுத்த முயற்சி நடப்பதாகவும் அவர் நினைவூட்டினார். முஸ்லிம் நாடுகளில் உள்ள ராணுவத்தினரின் திருக்குர்ஆன் ஓதுதல் போட்டியை துவக்கி வைத்து உரையாற்றினார் நஜாத்.

மேலும் அவர் தனது உரையில் கூறியது: பிரிவினை வாத மோதல்களை தவிர்க்கவேண்டும்.கோத்திரங்கள் இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானவர்கள். யூதர்களும், கிறிஸ்தவர்களும் குர்ஆனின் கொள்கைகளை பின்பற்றுகின்றனர்.

திருக்குர்ஆன் வசனங்களுக்கு தவறான விளக்கம் அளிப்பதே குழப்பங்கள் அனைத்திற்கும் காரணமாகும். பொய்க் கதைகளை பரப்பி ஒரு பிரிவு முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. முஸ்லிம்கள் யூத ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்றாக நிற்கவில்லை. திருக்குர்ஆனின் வசனங்களுக்கு வழங்கப்படும் மாறுபட்ட விளக்கங்களே இதற்கு காரணமாகும். மனித உரிமைகளுக்காக வாய்ச்சவடால் விடும் அரசியல் தலைவர்களும், தனி நபர்களும் சுதந்திரத்திற்கும், நீதிக்கும் தடையாக இருக்கின்றனர். பாரபட்சத்தை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். இவ்வாறு அஹ்மத் நிஜாத் கூறினார்.

Related

முக்கியமானவை 5446176674231882354

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item