விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் - இஸ்லாமிய கூட்டமைப்பு


முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர்கள் 22.01.2013 அன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தனர். கமிஷனர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்திக்க உள்ளனர் .

இந்த படத்தில் ட்ரெய்லர் காட்சிகள் வெளிவந்தவுடனேயே முஸ்லிம்களுக்கு எதிரான படம் என கருத்து வெளியானது. அப்போதே இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக இணைந்து படத்தை எங்களுக்கு முதலில் திரையிட்டு காட்டியபின்பே வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் கமல் பத்திரிக்கையாளர்களிடம் இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என வழக்கம்போலவே சமாதனம் பேச ஆரம்பித்தார்.இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சென்ற மாதம் இறுதியில் பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டமைப்பின் தலைவர்கள் பேட்டியளித்தனர். அதன் பின் நேரடியாக கமலை சந்தித்து முதலில் எங்களுக்கு திரைப்படம் திரையிட்டு காட்டப்பட வேண்டும் என்பதை கூறினார்கள்.

விஸ்வரூபம் படம் வெளியிடுவதற்கு முன் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்களிடம் கண்டிப்பாக திரையிட்டுக் காட்டப்படும் என்று கமலஹாசன் உறுதியளித்ததன்பேரில் 21.01.2013 அன்று திரையிட்டுக் காட்டப்பட்டது.படத்தில் முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருமறைக் குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமாக கொச்சைப்படுத்தும் விதத்திலும் படத்தில் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கியுள்ள கமலின் விஸ்வரூபம், விஸ்வரூபம் எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இந்நிலையில் படைத்தை கண்டப்பின்தான் தெரிகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு விஷம கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளன என்பது. படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டுவதோடு முஸ்லிம்களின் புனித குர்ஆன் தீவிரவாதத்தை போதிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதோடு இன்னும் கூடுதலாக முஸ்லிமாக நடித்துள்ள கமல் தனது மனைவியை வெளிநாட்டர்களுக்கு கூட்டிகொடுப்பது போன்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விஸ்வரூபம் படத்தை பார்த்த இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக படத்தை தடை செய்யக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. விஸ்வரூபம் படம் தடை செய்யப்படாவிட்டால் கடுமையான போராட்டங்களிலே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இறங்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்யக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக  ’விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக புகார் கூறி, அதனை கமலஹாசன் மறுத்து இருந்தார்.மேலும் படம் வெளியான பின்னர் அவ்வாறு காட்சிகள் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்றும் தவறுக்கு பிராயசித்தமாக இஸ்லாமிய அமைப்புகள் ஏழைகளுக்கு பிரியாணி வழங்க வேண்டும் எனக் கமலஹசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின்போது இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தொண்டு அனீபா , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது , மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ருதீன் , SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் , வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா , சட்டமன்ற உறுப்பினர் M.H.ஜவாஹிருல்லாஹ் , த.மு.மு.க மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி , INTJ மாநில தலைவர் S.M.பாக்கர் , மாநில துணைத்தலைவர் முனீர் அஹமது உட்பட இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்த பல தலைவர்கள் உடனிருந்தனர் .

Related

முக்கியமானவை 8915375110898043561

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item