SP உதயகுமாருக்கு முகுந்தன் C மேனன் விருது - NCHRO

கடந்த ஆண்டிற்கான(2012) முகுந்தன் சி மேனன் விருது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் தீரமிக்க போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் டாக்டர் எஸ்.பி. உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ரூபாயும், சான்றிதழ் பட்டயமும் அடங்கியது இவ்விருதாகும்.

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக ஆண்டு தோறும் மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் சி மேனன் பெயரில் மனித உரிமை-சுற்றுச்சூழல் தளத்தில் போராடும் நபர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. NCHRO-வின் முதல் செயலாளராக பணியாற்றிய முகுந்தன் சி மேனனை நினைவு கூற அவரது பெயர் இவ்விருதுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் நாகரி பாப்பையா (பெங்களூர்), பேராசிரியர் ஆர்.ரமேஷ் (பெங்களூர்), என்.பி.சேக்குட்டி (கேரளா), ஜே.தேவிகா (திருவனந்தபுரம்), பேராசிரியர் அ.மார்க்ஸ் (சென்னை) ஆகியோர் அடங்கிய நடுவர்கள் குழு விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களை பரிசீலீத்தது.

தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவிலில் பிறந்த டாக்டர் உதயகுமார், ஹவாய் பல்கலைக் கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிய அவர் 2001 ஆம் ஆண்டு முதல் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவரது மனைவி பெயர் மீரா. சூர்யா, சத்யா ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

Related

முக்கியமானவை 7592129676854562694

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item