கெளஸியா மஸ்ஜித் போராட்டத்தை தீவிரப்படுத்த வக்ஃப் பாதுகாப்பு கமிட்டி முடிவு

டெல்லி வளர்ச்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜித், கப்ருஸ்தான், காலனி ஆகியவற்றை திரும்ப கட்டவும், குற்றவாளிகளான டி.டி.ஏ(டெல்லி வளர்ச்சி அதிகாரிகள்), போலீஸ் அதிகாரிகள் மீது நீதி விசாரணை நடத்தவும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று வக்ஃப் பச்சாவோ தெஹ்ரீக் (வக்ஃப் பாதுகாப்பு கமிட்டி) தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

நாளை(ஜன்வரி-10) முதல் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். 30-ஆம் தேதி சட்டப் பேரவையை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று வக்ஃப் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் ஷாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரமும், இந்த கமிட்டியின் பொது கன்வீனரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான  ஹாஃபிஸ் மன்சூர் அலிகானும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: நாடு முழுவதும் வக்ஃபின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பான பொது மக்களின் விழிப்புணர்வுக்கு இப்பிரச்சாரம் உதவும். நோட்டீஸ், சுவரொட்டிகள், கருத்தரங்குகள், தெருமுனை பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் வாயிலாக அரசின் அநீதியைக் குறித்து டெல்லியின் மூலை முடுக்குகளில் எல்லாம் பிரச்சாரம் நடத்தப்படும். தேவைப்பட்டால் தேசிய அளவிலும் இது தொடர்பான பிரச்சாரம் நடத்தப்படும்.

பிரச்சனைக்கு தீர்வு காண சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் தலைமையில் கெளஸியா காலனி புனர்வாழ்வு பேரவை, டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித், தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ், சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் ஆகியோரை சந்தித்திருந்தனர்.

டெல்லி வக்ஃப் போர்ட் சி.இ.ஓ ஆபித் ஹஸனை சந்தித்து வக்ஃப் நிலத்தில் உள்ள மஸ்ஜிதை இடித்ததற்கு எதிராக வழக்கு பதிவுச் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஆபித் ஹஸனும், அப்பகுதி எம்.எல்.ஏ மதீன் சவுதரியும் இவ்விவகாரத்தில் தலையிட தயாராகவில்லை. இதனைத் தொடர்ந்தே பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து வக்ஃப் பச்சாவோ தெஹ்ரீக் (வக்ஃப் பாதுகாப்பு கமிட்டி) என்ற அமைப்பை உருவாக்கினோம். இதன் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஊட்டி வலுவான மக்கள் போராட்டத்தை நடத்துவதே நோக்கமாகும்.

பாப்ரி மஸ்ஜிதை இடிப்பதற்கு காரணமான கல்யாண்சிங்கிற்கும், கெளஸியா மஸ்ஜிதின் இடிப்புக்கு காரணமான ஷீலா தீட்ஷித்திற்கும் என்ன வேற்றுமை உள்ளது? என்று வக்ஃப் பாதுகாப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் மும்தாஸ் அஹ்மத் சவுலா கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.சி-எஸ்.டி கமிஷன் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தாஜுத்தீன் அன்ஸாரி, வக்ஃப் பாதுகாப்பு கமிட்டியின் நிர்வாகிகளான மவ்லானா அப்துல் வஹாப் கில்ஜி, டாக்டர் தஸ்லீம் ரஹ்மானி, மவ்லானா அன்ஸார் ராஸா ஆகியோர் பங்கேற்றனர்.

பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா, SDPI, ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், ஆல் இந்தியா இஸ்லாஹி மூவ்மெண்ட், ஆல் இந்தியா முஸ்லிம் லீக், கரீப் நவாஸ் பவுண்டேசன், யுனைட்டட் ஃப்ரண்ட் ஆஃப் புரொடக்ஷன் அண்ட் வெல்ஃபெயர் ஆஃப் அவ்காஃப், கவுஸியா காலனி புனர்வாழ்வு பேரவை, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், பொலிடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, முஸ்லிம் கல்வி அறக்கட்டளை, வஹ்தத்தே இஸ்லாமி, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா தீனி மதாரிஸ் போர்ட் உள்ளிட்ட அமைப்புகள் வக்ஃப் பாதுகாப்பு கமிட்டியில் இடம் பெற்றுள்ளன.

Related

முக்கியமானவை 4860057909200643170

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item