பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்ப்பை தொடர்ந்து கேரளாவில் விசுவரூபம் காட்சி நிறுத்தம்

பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து கொல்லம் மாவட்டத்தில் கமல் ஹாசனின் விசுவரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கொல்லம் மாவட்டத்தில் விசுவரூபம் திரையிடும் தியேட்டருக்கு முன்பாக நூற்றுக் கணக்கான பாப்புல ஃப்ரண்டின் உறுப்பினர்கள் திரண்டு கண்டனப் போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து திரைப்படத்தின் காட்சியை நிறுத்துவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது.

பாலக்காட்டில் நேற்று காலை 11 மணியளவில் விசுவரூபம் திரையிட்ட தியேட்டருக்கு முன்பாக பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். தியேட்டருக்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து போலீஸ் தலையிட்டது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

இதனிடையே கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து விசுவரூபம் திரையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் விஸ்வரூபத்திற்கு தடை!

நேற்று ஒரு தினம் மட்டும் கமலின் விசுவரூபத்திற்கு தடை விதிக்க ஹைதராபாத் போலீஸ் உத்தரவிட்டது. ஹைதராபாத் போலீஸ் கமிஷனர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக உள்துறை அமைச்சர் சபிதா இந்திர ரெட்டி தெரிவித்தார். கமிஷனர்கள் திரைப்படத்தை பார்த்த பிறகே அனுமதி வழங்குவர். ஆனால், ஜனவரி 29-ஆம் தேதி வரை திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்தி வைக்க போலீஸ் வலியுறுத்தியதாக திரைப்படத்தை திரையிட தீர்மானித்த மல்டிப்ளக்ஸின் மூத்த அதிகாரி கூறினார்.

ஏற்கனவே தமிழகத்தில் 2 வாரத்திற்கு விசுவரூபம் திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related

முக்கியமானவை 7817705919585901685

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item