முர்ஸி ஆட்சியில் 63 சதவீத எகிப்தியர்களும் திருப்தியாக உள்ளனர் - ஆய்வில் தகவல்!

இஃவானுல் முஸ்லிமீனை சார்ந்த டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்து நாட்டின் அதிபராக உள்ளார். இவரது கடந்த 6 மாத கால ஆட்சியில் 63 சதவீத எகிப்தியர்களும் திருப்தியை வெளியிட்டுள்ளனர் என்பது பஸீரா ஆன்லைன் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 6 சதவீத மக்களின் ஆதரவு முர்ஸியின் அரசுக்கும், முர்ஸிக்கும் அதிகரித்துள்ளது.

முன்பு நடந்த சர்வேயில் 57 சதவீத மக்கள் மட்டுமே முர்ஸியை ஆதரித்தனர். தற்பொழுது 6 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள் நல திட்டங்களை முர்ஸி தொடர்ந்தால் விரைவில் அவரது ஆதரவு 78 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முர்ஸியை ஆதரிப்பவர்களில் 40 சதவீதம் பேர் அவரது முடிவுகளை ஆதரிக்கின்றனர்.

23 சதவீதம் பேர் என்ன வந்தாலும் முர்ஸியை மட்டுமே ஆதரிப்பவர்கள் ஆவர். முர்ஸியை எதிர்ப்பவர்கள் 28 சதவீதம் பேர் ஆவர். அதில் 19 சதவீதம் பேர் முர்ஸியின் முடிவுகளை எதிர்க்கின்றனர். 9 சதவீதம் பேர் முர்ஸியையும், இஃவான்களையும் எதிர்ப்பவர்கள். மீதமுள்ள 9 சதவீதம் பேர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று சர்வே கூறுகிறது.

குறிப்பு: மேலும் நமது தூது நிருபர்கள் எடுத்த பேட்டியிலிருந்து முர்ஸிக்கு எதிராக ஊடகங்கங்களின் அதி மும்முரமாக வேலை செய்து வருவதால் இந்த சதவீதம் குறைவாக உள்ளது. இல்லையெனில் 80-85 சதவீதத்திற்கு மேல் திருப்தியாக இருக்கக் கூடும் என்று கருதப் படுகின்றது.

Related

முக்கியமானவை 4441895235883982085

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item