தூய உள்ளத்துடன் செயல்படுத்தும் காரியங்கள் தான் வெற்றி பெறும் - SDPI தலைவர் அபூபக்கர்

மூன்றாண்டு உழைப்பில் 23 மாநிலங்களில் வேரூன்றியுள்ளது SDPI., தூய்மையான உள்ளத்துடன் செயல்படுத்தப்படும் காரியங்கள் யாவும் வெற்றிபெறும், பணத்துக்கும் பதவிக்கும் ஆசைபட்டு கட்சியில் இணைந்திருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறி விடலாம் என்றார் அபூபக்கர்.

"Political Empowerment of Minorities" எனும் தலைப்பில் மைசூர் மாவட்ட SDPI சார்பாக நடத்தப்பட்ட கன்வென்ஷனில் கலந்துக்கொண்டு SDPI கட்சியின் தேசிய தலைவர், அபூபக்கர் பேசுகையில்:

நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம் சமூகம் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கண்துடைப்பு கமிஷன்கள் அமைக்கப்படுவதும் அதையும் செயல்படுத்த மறுப்பதும் தான் வாடிக்கையாக உள்ளது.

ஆண்டாண்டு காலமாக நடந்துவந்த இந்த அநியாயங்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண, துவங்கப்பட்டது தான் SDPI.

இறையருளால் கட்சி துவங்கி மூன்றாண்டுகளுக்குள் 23 மாநிலங்களில் வேரூன்றியுள்ளோம்,என்றார்.

நாம் உணர்வு பூர்வமாக செயல்படுபவர்களே தவிர உணர்ச்சி வசப்படுபவர்களல்ல.

பணத்துக்கும் பதவிக்கும் ஆசைபட்டு கட்சியில் இணைந்திருப்பவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி விடலாம், அத்தகையவர்களுக்கு இங்கு இடமில்லை என்றார் அபூபக்கர்.

கர்நாடக மாநில தலைவர் அப்துல் மஜீத் பேசும்போது :

நாம் இரு பெருநாட்களில் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொள்வதை போல, ஒன்று பட்டு செயல்பட்டால் நம்மால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை.

இன்னும் நூறாண்டுகளானாலும், காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் நம்மை புறக்கணித்துக்கொண்டு தானிருக்கும்.

மாநிலத்தில் பல கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் 9 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களும், சமுதாயத்துக்காக ஒன்றுபட்டு செயல் பட்டதுண்டா? எனக்கேள்வி எழுப்பினார் அப்துல் மஜீத்.

பாடபுத்தகங்களில் முஸ்லிம் விரோத கருத்துக்கள் உள்ளன. டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் கட்சிகள், எப்போதாவது முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக போராடியதுண்டா? இப்படி, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதற்கு எதிராக ஒன்றுபடவேண்டியது அவசியம் என்றார்,அப்துல் மஜீத்.

திருமறை குர்-ஆன் ஓதி துவங்கப்பட்ட நிகழ்ச்சியில், தேசிய துணைத்தலைவர், வழக்கறிஞர் சாஜித் சித்தீகி, மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹன்னான் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

Related

முக்கியமானவை 529213050602596359

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item