திரைப்பட தனிக்கைகுழுவை முறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வருகின்ற ஓராண்டிற்கான பணிகள் தொடர்பான விவாதங்கள் இச்செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

நூறாண்டுகளை கடந்து நிற்கும் இந்திய சினிமா வரலாற்றில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாம் மார்க்கத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இத்தகைய செயல்கள் சிறுபான்மை சமூக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நூறாண்டுகளை கடந்து நிற்கும் இச்சினிமாத்துறையை ஒழுங்கு படுத்துகின்ற பொறுப்பு திரைப்பட தனிக்கைகுழுவிற்கும் உண்டு. ஆனால் சிறுபான்மை சமூக மக்களை புண்படுத்தும் விதமாக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தடைவிதிக்காமல் அதனை கண்டும் காணாமல் விட்டுவிடுவது மிகவும் கண்டனத்திற்குறியதாகும். எனவே மத்திய அரசு இத்திரைப்பட தனிக்கைகுழுவை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில் வருகின்ற 19.01.2013 சனிக்கிழமை அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் அப்துல்லாஹ், ஜுனைத் அன்சாரி உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related

முக்கியமானவை 6851668770807876470

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item