விஸ்வரூபம் கண்டிப்பாக திரையிட்டுக் காட்டப்படும் - கமலஹாசன் உறுதி
http://koothanallurmuslims.blogspot.com/2013/01/blog-post_13.html
இதற்கு பிறகு விஸ்வரூபம் படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக முஸ்லிம் மக்களிடம் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக அணுகி வருகிறது ஏற்கனவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து கண்டிப்பாக முஸ்லிம்களிடம் காட்டிய பிறகே திரையிட வேண்டும் எனக் கூறியிருந்தன.
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மத் பக்ருதீன் தன் தரப்பு கருத்தை எடுத்து வைத்த பொழுது
அதன் அடிப்படையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் நடிகர் கமலஹாசனை சந்தித்து அவரிடம் விஸ்வரூபம் படம் சம்மந்தமாக விளக்கம் கேட்டனர். முஸ்லிம்கள் தரப்பு கோரிக்கைகளை கவனமாக கேட்ட கமலஹாசன், பின்னர் அவருடைய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். கண்டிப்பாக விஸ்வரூபம் படம் திரையிடப்படும் முன்பு முஸ்லிம் தலைவர்களிடம் திரையிட்டுக் காட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்
இதற்கிடையே உள்துறை செயலாளரிடம் இந்த திரைபடம் தொடர்பாக குறித்து மனு அளிக்கபட்டது. அப்பொழுது உள்துறை செயலாளர் கண்டிப்பாக மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தார்.
எனவே கமலஹாசன் இந்த திரைபடத்தை திரையிட்டு காட்டும்வரை எந்த வித அனுமானத்திற்கும் இடம் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இச்சந்திப்பின் போது இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.முஹம்மத் ஹனீபா , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது ஃபக்ருதீன் , தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது , இந்திய இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகி முனீர் , ஜம்மிபத்துல் உலமாயே ஹிந்த் நிர்வாகி மன்சூர் காஷிஃபி , வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா தலைவர் திரு.சிக்கந்தர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் திரு.அச.உமர்பாரூக் உள்பட பல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.