தஞ்சையில் SDPI நடத்திய மாபெரும் இரயில் மறியல்


தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகாவிடமிருந்து பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், வறட்சி, கடன் மற்றும் வறுமை காரணமாக தொடரும் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த, காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 45 ஆயிரம் ருபாய் நஷ்டயீடு வழங்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாக,

இன்று (09.01.2013), புதன்கிழமை, தஞ்சை இரயில் நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் தமிழக தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமையில் மாபெரும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் அப்துல் சத்தார்,எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹம்மது பாருக்,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் குடந்தை இப்ராஹீம்,தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ்,நாகை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது தாரிக்,தெற்கு மாவட்டதலைவர் முகைதீன் மரைக்காயர்,திருவாரூர் மாவட்ட தலைவர் பாவா பக்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தமது உரையில்

தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகா திறந்து விடாததால் தஞ்சை டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி பொய்த்து போய் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் நஷ்டத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து நடைபெறுகிறது.இது விவசாயிகள் சந்தித்துள்ள பெரும் நஷ்டத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துகிறது.

விவசாயிகளின் இந்த நிலைக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்

.மத்திய அரசு- உச்சநீதிமன்றம்,நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை அமல்படுத்தாமல் கர்நாடகா மாநிலத்துக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது.நடுவர் மன்ற தீர்ப்பை அமல் படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

தமிழக அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து ,மத்திய அரசுக்கு நிர்பந்தம் தர வேண்டிய தமிழக அரசு தன்னிச்சையாக செயல்படுவது கர்நாடகா அரசுக்கு தெம்பைதந்துள்ளது.எனவே தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்

டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 45,000/ நஷ்ட ஈடாக மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும்.விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு விவசாயம் செய்ய ரூபாய் 25,000/ செலவாகிறது.எனவே அதை மட்டும் கொடுத்தால் அவர்களின் பிரச்சினை தீராது.அவர்களின் இதர வாழ்க்கை செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.மீதமுள்ள 6 மாத வாழ்க்கையை எப்படி கழிப்பார்கள்

எனவே ஏக்கருக்கு ரூபாய் 45000/ வழங்க வேண்டும்.மேலும் டெல்டா விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மத்திய அரசு இதனை பேரிடராக அறிவித்து ,தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக ரூபாய் 1000 கோடி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related

முக்கியமானவை 6252460581272689491

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item