கூத்தாநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/01/blog-post_25.html
பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை நிர்வாகத்தை கண்டித்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ பயங்கரவாதிகளையும் கண்டித்து திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியில் 24-01-2013 மாலை 5 மணி அளவில் கூத்தாநல்லூர் பாப்புலர் ஃ ப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் வி.களத்தூரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் அமைந்திருக்கும் பகுதியில் மிக விமர்சையாக நடைபெற்ற மாற்று மத திருமண ஊர்வலத்தில் ஏற்பட்ட கைகலப்பில் முஸ்லிம்கள் மீது கற்களை கொண்டு சில சமூக விரோதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர், ஹிந்துத்துவ சக்திகளின் தூண்டுதலினால் அவ்வழியே சென்ற சில முஸ்லிம் இளைஞர்கள் மீதும் பயங்கரமாக தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் துறையினர் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு கல்லுரி மாணவர்கள் உட்பட 72 நபர்களை இது வரை கைது செய்துள்ளனர், மேலும் 28 நபர்களை தேடி வருகின்றனர்.
அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல் துறையினரையும், கலவரம் செய்யும் எண்ணத்துடன் ஊர்வலம் சென்று முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ பயங்கரவாதிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.