மதுபான ஆலைகள் முற்றுகை : மனிதநேய மக்கள் கட்சியினர் கைது!

7 ஆயிரம் கிராமங்கள் உட்பட 8 ஆயிரம் இடங்களில் இவ்விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இறுதியாக இன்று (டிசம்பர் 30) தமிழகம் முழுவதும் 48 இடங்களில் நடைபெற்ற மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகள் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் அணிதிரண்டனர்.
காவல்துறை தடையை மீறி மதுபான ஆலைகள் மற்றும் மதுக்கடைகளை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.
இம்மாபெரும் அறப்போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மக்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.