அபுதாஹீரை விடுதலை செய்ய கோரி அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்புகள் ஆர்ப்பாட்டம்






கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாகிர் கடன்ஹா 5 ஆண்டுகளாக அறிய வகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒரு நபருக்கு வரக்கூடிய நோய்.இந்த நோய் தாக்கியவரின் ஒவ்வொரு உள் உறுப்புகளையும்செயல் இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருந்து வசதி இன்றி சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப் பிடித்தார். இதற்கிடையே சிறை விதி நடைமுறை தொகுதி 2. விதி 632 இன் படி மரணப்படுக்கையில் இருக்கும் இந்த நோயாளியை அரசு மற்றும் சிறை நிர்வாகம் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதியளிக்கிறது.

அதன் அடிப்படையில் சகோதரனின் நோயின் வீரியத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு இவருக்கு உரிய பரிசோதனை செய்ய மருத்துவ குழு நியமிக்கப்பட்டு அவரது விடுதலையை முடக்கி வைக்கப்பட்டது. ஆனால் அதே ஆட்சியில் 7 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகள் கருணையின் அடிப்படையில் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டனர். உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் இம்முஸ்லிம் சிறைவாசியின் மீது கிஞ்சிற்றும் கருணையின்றி அரசு பாரபட்சம் காட்டியது. ளுடுநு நோயின் பாதிப்பால் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு அதனை தொடர்ந்து அவருடைய இருதயம் பாதிப்புக்குள்ளானது. இத்தனை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு மீண்டும் அவருக்கு 90 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து நோயின் கடுமை அதிகரித்து அவருடைய ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்க ஆரம்பித்ததை தொடர்ந்து மீண்டும் அவருக்கு விடுதலை வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கும் பொழுது அரசு அக்கோரிக்கையின் அடிப்படையில் மருத்துவ குழு அமைக்காப்பட்டு அந்த மருத்துவ குழு விடுதலைக்கு சாதகமாக அறிக்கை அளித்தது. இருந்த போதும் வட்டாட்சியர் மாவட்ட காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரின் அறிக்கை விடுதலைக்கு பாதகமாக அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவருக்கு பரோல் நீடிப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதனை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் கடந்த 30-8-12 அன்று முதல் அபுதாஹிரை பரோலில் விட தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தாமல் இவ்வரசு உத்தரவுக்கு மேல் முறையீடு செய்து அவரது பரோலை முடக்க முயற்சித்தது. ஆனால் உயர் நீதிமன்றம் அரசின் மேல் முறையீட்டு மனுவை 14-9-2012 அன்று தள்ளுபடி செய்தது. தமிழகத்தின் உயர் அதிகாரமுடைய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் அப்பட்டமாக அரசு புறக்கணித்து வருகிறது.

தற்போது அந்த சகோதரனின் இரண்டு சிறுநீரகமும் முழுவதும் பழுதடைந்து விட்டதால் இனி அவர் வாழ்நாள் முழுவதும் டயாசிஸ் செய்துதான் ஆகா வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்த சிறைவாசியின் மீது அரசிற்கு ஏன் இந்த பாரபட்சம். அவரின் பாராளும் விடுதலையும் அவரை குணப்படுத்துவதற்காக அல்ல. அவரின் உயிரை பாதுகாப்புதான். இத்தனை அரசு நன்றாக அறிந்திருக்கும் முஸ்லிம் என்ற ஒரு காரணத்திற்கா இரக்கம் காட்ட மறுப்பது.?!!! இதற்கு ஒட்டு மொத்த சமூகமும் குரல் கொடுக்க வேண்டும். இது தனி மனிதனுக்கு இழைக்கும் அநியாயம் அல்ல. இது ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநியாயம். இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும்இ ஜமாத்துகளும் ஒன்றிணைந்து இவருடைய விடுதலைக்காக தொடர்ந்து போராடும். இதன் முதல் கட்ட போராட்டமாக கோவையில் செஞ்சிலு சங்க முன்பு மாலை 4:30 மணிக்கு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து முஸ்லிம்களின் இயக்க கூட்டமைப்பு சார்பாக சிறப்புரைகள்: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில பேச்சாளர் கோவை ஜாகீர்,  மனித நேய மக்கள் கட்சி சார்பாக கவுன்சிலர் கோவை சாதிக் அலி, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் வி.எம்.அபுதாஹீர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் எ.முஹம்மது இபுராஹிம், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ, சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர் சம்சுத்தீன் ஆகியோர் பேசினார்கள். இதில் அனைத்து முஸ்லிம்களின் இயக்க கூட்டமைப்பு சார்பாக கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள் வருமாறு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் இபுராஹிம் பாதுஷா, மாவட்ட செயலாளர்கள் ஷாநாவஸ், ஜலீல், அலிபாய், ஊடக பொறுப்பாளர் ஹக்கீம், சாகுல் ஹமீது, மனித நேய மக்கள் கட்சி தொழில் சங்க மாநில செயலாளர் சுல்தான் அமீர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான், துனை தலைவர் அக்பர் அலி, செயலாளர்கள் நிஷார், ஹருன் பாஷா, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் பஷீர், எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாவட்ட நிர்வாகிகள் அசரப்,  அன்சர் உசேன், அப்பாஸ், அனீஸ் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் கபூர், மாவட்ட செயலாளர் முஹம்மது பசீர், புறநகர் செயலாளர் இபுராஹீம், மாவட்ட நிர்வாகி யாகூப் ஹாஜியார், பி.கே சலாம், ஷிப்லி, ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மாவட்ட தலைவர் உமர்பாருக், மக்கள் தொடர்பு பொறுப்பாளர் கோவை ஹக்கீம் நிர்வாகிகள் ஷேக் அப்துல்லா, அபுதாஹீர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான், சாகுல் ஹமீது, மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஷாஜகான், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநகர தலைவர் ஹைதர் அலி, மற்றும் நிர்வாகிகள் பாருக், நாசர், ஷாநாவஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் புகாரி, கலீல் ரஹ்மான், அபுதாஹீர், சுலைமான், மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள், நகர , கிளை அணிகள், நிர்வாகிள், பெண்கள் பொது மக்கள், உள்பட 3000 பேர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்வுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர் எம்.எஸ்.எம் அபூதாஹீர் தொகுத்து வழங்கினர்.

Related

முக்கியமானவை 4064703379586033251

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item