ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்

193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன. பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தபோது அமெரிக்கா எதிர்த்து வாக்களித்தது. பிரிட்டன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. செக், கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.