கூத்தாநல்லூர் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

 சிங்கப்பூரில் உள்ள கூத்தாநல்லூர் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் ( Annual General Meeting ) பென்கூலேன் பள்ளி அரங்கத்தில் 09-12-12 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிங்கப்பூரில் வாழும் கூத்தாநல்லூர் மக்கள் பெருந் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு கூத்தாநல்லூர் சங்கத்தின் தலைவர் கணக்கபிள்ளை ஹாஜா மைதீன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி தந்தார்.

மதியம் உணவிற்கு பிறகு சரியாக 2:30 மணியளவில் ஆரம்பிக்கப் பட்ட கூட்டத்தின் முக்கிய அங்கமாக கூத்தாநல்லூர் சங்கம் ஆரம்பிக்க காரணமாக இருந்த கஷ்மிரா அமீர், வருசை ஜபருல்லாஹ், மொலுக்கன் நிஜாம் அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவிக்க பட்டனர், பின்னர் இந்த சங்கம் துவங்குவதற்கான காரணத்தையும் அதன் கட்டாயத்தையும் பற்றி விவரித்தனர்.


இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக "பொதுவான கண் பிரச்சனைக்கள்" என்ற தலைப்பில் பொதக்குடியை சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் டாக்டர் முஹம்மது பாரூக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விரிவுரையாற்றினர். பின்னர் "சமூக வலைதளைங்களின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் ஆசிரியர் டொக்கு மைதீன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி சிறிய ஒரு குறும்படமும் திரையிடப்பட்டது.

குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு விளையாட்டுகளும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

Related

முக்கியமானவை 9221162699056785857

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item