அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட MP-க்கள் - பிரதமரிடம் சரமாரி கேள்வி!

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள் : 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் சரமாரி கேள்வி!

இந்தியாவில், "இந்தியன் முஜாஹிதீன்" அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகள் யார் யார்? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர், எம்.பி.க்கள்.

அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் - கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் - பல ஆண்டுகள் சிறையில் கழித்தபின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் - பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது.

ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு, தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்.

ராம்விலாஸ் பாஸ்வான் :

2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு, வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது?

ஒரு நேரத்தை "கெடு"வாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் :

இம்முறை, இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல், நானே - நேரடியாக கவனிக்கிறேன் என்றார்.

மேலும், எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு - நிரபராதிகளின் மறுவாழ்வு - தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான "மெக்கானிசம்" தயாரிக்கப்படும் என்றார்,பிரதமர்.

ராம்கோபால் யாதவ் :

உத்தரபிரதேச அரசு, அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால், இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள், நாளை இவர்களுக்கு "பத்மபூஷன்" விருது கொடுப்பீர்கள், என "நீதிபதிகள் கமென்ட் அடித்து" அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்.

முஹம்மத் அதீப் :


முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது, என்றார்.

மணிசங்கர் அய்யர் :

அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்.

பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது, குறிப்பிடத்தக்கது.

Related

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப்...

BJP முழுஅடைப்பின் பெயரால் தமிழகம் முழுவதும் வன்முறை!

பா.ஜ.கவின் தமிழக பொதுச் செயலாளர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிஜேபி மற்றும் சங்க்பரிவார் அமைப்பினர் நடத்திய முழு அடைப்பின் போது புதுசேரியில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.முழு அடைப்பையொட...

BJP மாநில செயலாளர் படுகொலை: சேலம் பகுதிகளில் கலவர சூழல்!

பாஜக மாநில செயலாளர் ரமேஷின் கொலையைத் தொடர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கலவர சூழல் நிலவுகிறது. ரமேஷ் படுகொலையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item