அமெரிக்க ட்ரோன் விமானத்தை தரையிறக்கியது ஈரான்
http://koothanallurmuslims.blogspot.com/2012/12/blog-post_8.html
அமெரிக்க ட்ரோன் (ஆளில்லா விமானம்) விமானத்தை பிடித்து தரையிறக்கியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஈரான் ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.
பாரசீக வளைகுடா வழியாக தங்களின் வான் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்த ட்ரோன் விமானத்தை தடுத்து நிறுத்தி பிடித்து தரையிறக்கியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
போர்க் கப்பல்களில் இருந்து அனுப்பப்பட்ட ஸ்கான் ஈகிள் என்ற ட்ரோன் விமானத்தை ஈரான் ராணுவம் பிடித்து தரை இறக்கியதாக கூறப்படுகிறது. எவ்வாறு விமானத்தை பிடித்தோம் என்ற தகவலை ஈரான் ராணுவம் தெரிவிக்கவில்லை. ஆனால்,
விமானத்தின் புகைப்படத்தை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஈரானின் அணு சக்தி ரகசியங்களை வேவு பார்க்க அமெரிக்க உளவு நெட்வர்க்கை வலுப்படுத்தியதாக நேற்று முன் தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனைத்தொடர்ந்து ஆளில்லா விமானத்தை பிடித்து தரையிறக்கியதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், இதற்கு அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை. இவ்விஷயம் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கன் ஆர்.க்யூ.-170 என்ற ஆளில்லா விமானத்தை ஈரான் முன்பு தரையிறக்கியது. ஆனால் அமெரிக்கா எந்திரக் கோளாறு காரணமாக அது ஈரான் பகுதியில் தவறுதலாக இறங்கி விட்டது என்று காரணம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.