எகிப்தில் 3 அதிபர் வேட்பாளர்கள் மீது விசாரணை

முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜன்சி தலைவர் முஹம்மது அல் பராதி, முன்னாள் அரபு லீக் தலைவர் அம்ர் மூஸா, பாப்புலர் கரண்ட் பார்டி நிறுவனர் ஹமதீன் ஸபாஹி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பு வழக்குரைஞர் தல் அத் இப்ராஹீம் அப்துல்லாஹ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க மூன்றுபேரும் சதி ஆலோசனை நடத்தியதாக கூறும் புகாரை ஸ்டேட் செக்யூரிட்டி ப்ராஸிக்யூஸனிடம் தல் அத் வழங்கினார். வழக்கறிஞரான ஹமத் ஸாதிக் அளித்த புகாரில் வஃப்த் கட்சி தலைவர் அல் ஸயீத் அல் பதவியும், ஜட்ஜஸ் க்ளப் தலைவர் அஹ்மத் அல் ஸைதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் சிபி லிவ்னியுடன் அம்ர் மூஸா ரமல்லாவில் வைத்து சந்தித்ததுடன், எகிப்தில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
புகாரில் கூறப்பட்ட இதர நபர்கள் கெய்ரோவில் உள்ள வஃப் கட்சியின் அலுவலகத்தில் கூடி அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்களையும் ஸாதிக் அளித்துள்ளார்.இவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடைச்செய்து வஃப்த் கட்சியின் தலைமையகத்தை ஜஃப்தி செய்யவேண்டும் என்று ஸாதிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முர்ஸிக்கு எதிராக ஒரு பிரிவினர் நடத்தும் போராட்டத்திற்கு கான்ஸ்டிடியூசன் கட்சி ஸ்தாபகர் அல் பராதி, கான்ஃப்ரன்ஸ் பார்டி தலைவர் அம்ர் மூஸா, வஃப்த் கட்சி தலைவர் ஸபாஹி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.