பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள்

இதர நிர்வாகிகள் பின் வருமாறு:
துணைத் தலைவர் - பேராசிரியர் பி.கோயா (கேரளா)
செயலாளர்கள் - எம்.முஹம்மது அலி ஜின்னா (தமிழ் நாடு),
இல்யாஸ் முஹம்மது தும்பே (கர்நாடகா)
பொருளாளர் - முஹம்மது ஷஹாபுத்தீன்
தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:
இ.எம்.அப்துற்றஹ்மான், ஹாமித் முஹம்மது, பி.என்.முஹம்மது ரோஷன், எம்.அப்துல் ஸமத், அனீஷ் அஹ்மத், மவ்லானா உஸ்மான் பேக், எ.யா முஹ்யத்தீன், வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப், எம்.முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் ஆவார்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!
அடையாளமும், உரிமைகளும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு, உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டி, உன்னத சமுதாயமாக மாற்றும் உயர்வான லட்சியத்தை நோக்கி வழி நடத்தி செல்லும் நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய தலைவர்களுக்கு கேரள மாநிலம் திரூரில் உள்ள நகராட்சி ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் மாநில நிர்வாகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.நிகழ்ச்சியில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் பங்கேற்றனர்.