45 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ஸாவில் காலித் மிஷ்அல்
http://koothanallurmuslims.blogspot.com/2012/12/45.html
45 ஆண்டுகள் நீண்ட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பிறகு ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல் காஸ்ஸாவிற்கு வருகை தந்துள்ளார். நேற்று மாலை ஹமாஸின் அரசியல் விவகார தலைவரான மிஷ்அல் பிறந்த மண்ணிற்கு திரும்பினார். இன்று காஸ்ஸாவில் ஹமாஸ் துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறும் விழா நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக மிஷ்அல் காஸ்ஸாவிற்கு வந்துள்ளார்.
காஸ்ஸாவிற்கு வருகை தந்த காலித் மிஷ்அலை காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யாவும், ஹமாஸ் தலைவர்களும் வரவேற்றனர். “இது எனது மூன்றாவது பிறப்பு. அடுத்த முறை நான் கால்வைப்பது சுதந்திர ஃபலஸ்தீனில்” என்று தான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக மிஷ்அல் காஸ்ஸாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதல் பிறப்பு 1956-ஆம் ஆண்டிலும், 2-வது பிறப்பு 1997-ஆம் ஆண்டு இஸ்ரேலின் கொலை முயற்சியில் இருந்து தப்பியதாகும் என்று மிஷ்அல் கூறினார்.
1967-ஆம் ஆண்டு மேற்கு கரையில் இருந்து காலித் மிஷ்அல் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவானது. கடந்த மாதம் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே எகிப்தின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது உருவான ஒப்பந்தத்தின் விளைவாகவே காலித் மிஷ்அல் காஸ்ஸாவிற்கு வர முடிந்துள்ளது.
எகிப்தில் இருந்து ரஃபா எல்லை வழியாக மிஷ்அல் காஸ்ஸாவிற்கு வருகை தந்துள்ளார். இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் கொலை செய்யப்பட்ட ஹமாஸ் மூத்த தலைவர் ஷேக் அஹ்மத் யாஸீன், அண்மையில் கொலை செய்யப்பட்ட ஹமாஸின் ராணுவப் பிரிவு கமாண்டர் அஹ்மத் ஜஃபரி ஆகியோரின் வீடுகளுக்கு காலித் மிஷ்அல் செல்வார் என கருதப்படுகிறது.
மேலும் மிஷ்அல், ஹமாஸ் மற்றும் ஃபத்ஹ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். மிஷ்அலின் காஸ்ஸா சுற்றுப்பயணம், இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஹமாஸின் செய்தி தொடர்பாளர் ஸமி அபூஸுஹரி தெரிவித்தார்.
3 தினங்கள் சுற்றுப் பயணத்திற்காக மிஷ்அல் காஸ்ஸாவிற்கு வருகை தந்துள்ளார். ஹமாஸ் தலைமை வகிக்கும் காஸ்ஸா நகரத்தில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணியிலும் மிஷ்அல் கலந்துகொள்வார் என கருதப்படுகிறது. 1956-ஆம் ஆண்டு மேற்கு கரையில் பிறந்த மிஷ்அல் 1967-ஆம் ஆண்டு குவைத்திலும் பின்னர் ஜோர்டானிலும் தங்கியிருந்தார். ஜோர்டானில் வைத்து அவர் ஹமாஸின் பணிகளில் ஈடுபட்டார்.
1997-ஆம் ஆண்டு ஜோர்டானில் வைத்து இஸ்ரேலின் கொலை முயற்சியில் இருந்து அல்லாஹ்வின் கிருபையினால் உயிர் பிழைத்த மிஷ்அல் பின்னர் கத்தருக்கு வந்தார். ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் பொறுப்பிற்கு மிஷ்அல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி மாதம் சிரியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கும் வரை சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் தங்கியிருந்து பணிகள் ஆற்றி வந்தார். தற்பொழுது கத்தர் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தங்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.