தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்பு வெட்ட வெளிச்சம்: போராட்டத்திற்கு வீதியில் இறங்கிய RSS

அஜ்மீர் குண்டுவெடிப்பில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதால் ஆர்.எஸ்.எஸ் போராட்டத்திற்கு வீதியில் இறங்கியது.

வழக்கத்திற்கு மாறாக நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தொண்டர்கள் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். முதன்முறையாக இத்தகையதொரு போராட்டத்தை நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் உள்ளிட்டவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகி மேலும் பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கைதுச் செய்யப்படும் சூழல் நிலவி வரும் வேளையில் நிர்பந்தத்திற்கு ஆளாகிய ஆர்.எஸ்.எஸ் அரசியல் கட்சிகளின் மாதிரியில் போராட்டத்திற்காக சாலையில் இறங்கியது.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட குற்றவாளிகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்த தலைவர்களாவர்.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளுடன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தொடர்புள்ளது. இத்துடன் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இந்நிலையில், தங்களின் தலைவர்களை அரசியல் உள்நோக்கத்துடன் பொய் வழக்கில் சிக்கவைப்பதாக ஆர்.எஸ்.எஸ் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

லக்னோவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர் மோகன் பாகவத்தும், ஹைதராபாத்தில் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷியும் கண்டன பேரணிக்கு தலைமையேற்று உரை நிகழ்த்தினர்.

டெல்லி பாராளுமன்ற தெருவில் நடந்த கண்டன பேரணியில் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், பல்பீர் பூஞ்ச் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்தியாவின் எல்லா மாவட்ட தலைநகர்களிலும் ஆர்.எஸ்.எஸ் கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றதும், அரசியல் நோக்கத்துடனானதாகும் என ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய தலைவர் மோகன் பாகவத் உரை நிகழ்த்தினார்.

பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என கைதுச் செய்யப்பட்டுள்ள ஹிந்துக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பில்லை. தற்போதைய குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

இந்திரேஷ் குமாருக்கெதிராக ஏதேனும் ஆதாரத்தை கண்டறிய புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு எங்களின் பெயரை கெடுக்க இந்திரேஷை வழக்கில் உட்படுத்த திட்டமிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹிந்து அமைப்புகளின் நம்பிக்கைய தகர்க்க புலனாய்வு ஏஜன்சிகளை அரசு தவறாக பயன்படுத்துகிறது என டெல்லியில் பல்பீர் பூஞ்ச் கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

RSS 700372695568505513

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item