பேராசிரியர் அனஸிற்கு ஜாமீன்

நபி(ஸல்...) அவர்களை அவமதித்த முவாற்றுப்புழா பேராசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பேராசிரியர் அனஸிற்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வி.ஷேர்ஷி நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கினார்.

இவ்வழக்கில் அனஸ் 47-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இத்துடன் பரிசீலிக்கப்பட்ட இதர நபர்களின் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடிச் செய்துள்ளார்.

இக்குற்றத்தில் அனஸ் நேரடியாகவோ, அல்லாமலோ ஈடுபடவில்லை என்ற போலீஸின் ரிமாண்ட் அறிக்கையை மேற்கோள்காட்டியது நீதிமன்றம். அத்தகைய நபரை போலீஸ் கஸ்டடியில் 90 நாட்களுக்கு மேல் வைத்திருப்பது சட்டவிரோதமாகும். இரண்டு நபர் ஜாமீன், ஒரு லட்சம் ரூபாய் உறுதி பத்திரம் ஆகியவற்றை தாக்கல் செய்து, திங்கள், சனி கிழமைகளில் முவாற்றுப்புழா காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

கடந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசனில் சிறையிலிருந்தே போட்டியிட்டு அமோகமாக வெற்றிப் பெற்றவர் பேராசிரியர் அனஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 2961722435876103394

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item