பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய PFI முடிவு

பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கட்சிதாரராக இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.பெங்களூரில் கடந்த அக்டோபர் 30,31 தேதிகளில் கூடிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் மானிட்டரிங் செல் (சட்டநடவடிக்கை கண்காணிப்பு பிரிவு) ஒன்றை உருவாக்கியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு அநீதியும், முன்னரே திட்டமிட்டதும், சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழுக் கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது. ஹிந்தத்துவா அமைப்புகளின் வகுப்புவாதவெறி பிரச்சாரங்களை ஒப்புக்கொள்கிறது இத்தீர்ப்பு. இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கையின் மீதான மிகவும் அநீதியான தாக்குதல்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வு.தேசம் முழுவதும் இதற்கு நீதியை எதிர்பார்த்திருந்த பொழுதிலும் நீதி என்பது தற்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எப்பொழுதுமே முன்னணியில் இருந்துள்ளது. புதிய சூழலில் வருகிற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தேசிய அளவில் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்ய பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக-பொருளாதார சக்திப்படுத்துதலை செறிவூட்டுவதன் ஒரு பகுதியாக சமுதாய முன்னேற்றத்திற்கான பரிபூரணமான திட்டத்திற்கு இக்கூட்டத்தில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் இதன் ஒரு பகுதியாக சிறப்புத் திட்டங்களும், நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்திய பிறகு சிறப்பு ப்ராஜக்டுகள் (வேலைத் திட்டம்) உருவாக்கப்படும். இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேசிய பொதுமக்கள் ஆரோக்கிய வாரம் கடைப்பிடிக்கப்படும் எனவும் பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது. ஆரோக்கியம், சுத்தம், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள், யோகா வகுப்புகள், ஃபிட்னஸ் முகாம்கள், சுத்தம் தொடர்பான நிகழ்ச்சிகள், ஆரோக்கிய விழிப்புணர்வு மடக்கோலைகள் விநியோகித்தல் ஆகியன உட்படுத்தியதுதான்

இந்த பிரச்சாரம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேசியப் பொதுச்செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், டாக்டர் மஹ்பூப் ஷெரீஃப், முஹம்மது இல்லியாஸ், வி.பி.நஸ்ருத்தீன், முஹம்மது அலி ஜின்னா, அஃப்ஸல் பாஷா, உஸ்மான் பேக், ரியாஸ் பாஷா உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

Related

SDPI 2166964180375358916

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item