ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டும்: இஸ்ரேலின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிக்க அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஈரானின் அணுசக்தித் தொடர்பான நம்பகமான ராணுவ அச்சுறுத்தல் நீடிப்பதால் அந்நாட்டை தாக்கவேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையில் அமெரிக்காவிற்கு உடன்பாடில்லை என அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மீது அழுத்தம் கொடுக்க ராணுவரீதி அல்லாத நடவடிக்கைகளும், தடைகளும் போதுமானதாகும். எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயார்தான். ஆனால், இவ்வேளையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியல்-பொருளாதார நடவடிக்கைகள் பொருத்தமானதாகும் என கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

எல்லா விவகாரங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் என்பதுதான் ஒபாமாவின் நிலைப்பாடு. ஈரான் அரசு மீது அழுத்தம் கொடுக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடை போதுமானதாகும். ஈரானுக்கு முன்பைவிட தடை அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கேட்ஸ் கூறுகிறார்.

ஈரானுக்கெதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளையில் அணு ஆயுத நிர்மாணம் அல்ல அணு செறிவூட்டுதல்தான் தங்களுடைய நோக்கம் என ஈரான் தொடர்ந்து கூறிவருகிறது. அணு ஆயுத பரவல் தடைச்சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் செயல்படுகிறோம்.

ராணுவ நடவடிக்கை இப்பகுதியை போர்க்களமாக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்தி:தேஜஸ் - பாலைவனதூது

Related

Isreal 2151307432636644341

Post a Comment

  1. பார்த்திபராசன்January 17, 2012 at 5:47 PM

    ஐரோப்பிய இராணுவ, மற்றும் அரசியல் தளங்களில் உள்ள யூத அதிகாரிகளை(போலந் குடியேறிகளும், இந்தியக் குடியேறிகளுமே மிக ஆபத்தான மக்கள் பேரழிவிற்கு அடி கோலுபவர்களாகக் காணப்படுகின்றனர்.) இனம் கண்டு அழித்தாலே இந்த உலக அழிவைத் தடுக்க முடியும்.

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item