சென்னையில் RSS நடத்திய பொதுக்கூட்டமும், புதிய அனுபவங்களும்!

ந்துத்துவ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிறப்பு, வளர்ப்பு, இருப்பு பற்றி பல நூல்களையும், இதழ்களையும் படித்து அறிந்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் காரர்களின் உடை, அவர்கள் பங்கேற்கும் சாகாக்கள் ஆகியவற்றை, புகைப்படங்கள் மற்றும் சில காட்சிப் பதிவுகளின் மூலம் கண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவர்களின் நடவடிக்கைகளை நான் நேரில் கண்டதில்லை.

தமிழகத்திலேயே ஆர்.எஸ் எஸ்.வலுவாகக் காலூன்றி இருக்கிற கான்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற போதிலும் ஆர்.எஸ். எஸ்ஸின் தீவிர செயல்பாடுகள் எதையும் நேரடியாகப் பார்த்ததில்லை. ஆனால், அவர்கள் எப்படி பயிற்சி எடுக்கிறார்கள் என்பதை அறியவும், அதன் தலைவர்கள் எப்படி தொண்டர்களைத் தயார் படுத்துகிறார்கள் என்பதை தெரியவும் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் ஒரு தலைமை அமைப்பாக இருந்து கொண்டு நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை இயக்கி வருகிறது. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு அமைப்பை அது பயன் படுத்துகிறது.எல்லா விதமான நேரடி நடவடிக்கைகளிலும் அந்த அமைப்புகள் ஈடுபடுமே தவிர ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடாது. பொதுக் கூட்டம் போடுவதோ, ஆர்ப்பாட்டம் நடத்துவதோ, மைக்கும் வாயும் கிழிய தெருமுனையில் நின்று எதிரிகளைத் தாக்குவதோ ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலை அல்ல. திட்டம் வகுப்பதும், அந்தத் திட்டத்தை செயல்படுத்த கட்டமைப்பைக் கூர் படுத்துவதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலையாக இருந்து வருகிறது. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடிவதில்லை.

தமிழ் நாட்டில் நமக்கு இந்து முன்னணியைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். அதன் தலைவரின் பேச்சைக் கேட்டிருக்கிறோம்; அதன் கூட்டத்தைப் பார்த்திருக்கிறோம்; அது நடத்தும் ஊர்வலங்களையும், அதில் பங்கேற்பவர்கள் யார் என்பதையும் நேரடியாகக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்து முன்னணியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை நாம் கண்டதில்லை.

இந்நிலையில் 'அயோத்தி தீர்ப்பு' பற்றியும், 'காவி பயங்கரவாதம்' என்ற ப.சிதம்பரத்தின் அறிவிப்பு பற்றியும் பேசுவதற்காக, சென்னையில் ஆர்.எஸ்.எஸ் பொதுக் கூட்டம் நடைபெறப் போவதாக அறிந்தேன். நண்பர் ஒருவர் இது பற்றி சொன்னவுடன், 'இந்து முன்னணி அல்லது வி.ஹெச்.பியின் பெயரில் நடத்தப் படும் கூட்டத்தைத் தான் அவர் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்று சொல்கிறாரோ' என்று நினைத்து அதை விட்டுவிட்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களைப் பார்த்த போது நண்பர் சொன்னது உண்மைதான் என்பதைப் புரிந்து கொண்டேன். உடனே அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் நுழைவாயில் இருக்கும் தெருவில், 10 -11 -2010 புதன்கிழமை மாலை
6.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. நான் அரை மணிநேரம் முன்னதாகவே சென்றுவிட்டேன். ஆர்.எஸ்.எஸ் டவுசர் போட்ட இளைஞர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். பாரதியார் வாழ்ந்த இடம் திருவல்லிக்கேணி என்பதால்,அவரது தேச பக்திப் பாடல்களை ஒரு இசைக் குழுவினர் பாடிக் கொண்டிருந்தனர். அங்கே திரண்டிருந்த 90 சதவீத பார்ப்பனர்களும் அப்பாடல்களைக் கேட்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தனர்.

சரியாக 6.29 க்கு இசைக்குழுவினர் மேடையைக் காலி செய்தனர். ஒரு நொடி கூட கூடவோ குறைவோ இல்லாமல் மிகச் சரியாக 6.30 க்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மேடையில் தோன்றினர். ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழக பொறுப்பாளர்களும், குமுதம் ஜோதிடம் இதழின் ஆசிரியர் கோபால்ஜி மற்றும் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.கூட்டத்தில் ''காவி-பயங்கரவாதமா?'' என்னும் நூல் வெளியிடப்பட்டது. வந்தே மாதரம் பாடலோடு கூட்டம் நிறைவடைந்தது.

பாபர் மஸ்ஜிதை மீட்க என்ன வழி? என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில், ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளைப் பற்றி விரிவாகக் கூறியிருந்தேன். பாபர் மஸ்ஜிதை ராம ஜென்ம பூமியாக மாற்றுவதற்கு என்னென்ன வகையில் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் என்பதைப் பற்றி அலசியிருந்தேன்.என் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த ஒவ்வொன்றையும் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் நேரடியாகக் கண்டேன். நூல்களின் மூலம் படித்து அறிந்ததை விட, ஆர்.எஸ்.எஸ்ஸின் நடவடிக்கைகளை நேரில் கண்டபோது அதன் பயணத்தையும், இலக்கையும் தெளிவாக விளங்க முடிந்தது.

நாடு முழுவதும் நடை பெற்ற ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பங்கு உண்டு என்று மத்திய அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கும் இந்த சூழலில், பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் என்று ஆர்.எஸ்.எஸ் இப்படி நேரடியாகக் களத்தில் இறங்கியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

''ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டால் அடுத்தடுத்து எப்படி காய் நகர்த்த வேண்டும் என்று, நாங்கள் தெளிவாக திட்டம் வகுத்து வைத்திருக்கிறோம். முதலில் என்ன செய்ய வேண்டும்; இரண்டாவது என்ன செய்ய வேண்டும்; மூன்றாவது என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் வரையறுத்து, எதற்கும் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு தடையைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.'' என்று ரொம்ப கேஷுவலாகப் பேசினார் ராமகோபாலன்.

அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டிய கடமையும்,பொறுப்பும் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கிறது.

''நாம் என்ன ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரி தீர்மானிக்கிறான்'' என்றார் மாவோ. இந்திய முஸ்லிம்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை, ஆர்.எஸ்.எஸ் தன் செயல்பாடுகளின் மூலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. உணருவார்களா முஸ்லிம்கள்?

நன்றி : ஆளூர் ஷாநவாஸ்

Related

RSS 226223625711480640

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item