எகிப்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பினர் கைது

எகிப்தில் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பைச் சார்ந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த வாரம் எகிப்தில் தேர்தல் நடக்கவிருக்கவே இக்கைது நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. தேர்தலையொட்டி எதிர்கட்சி உறுப்பினர்களை கொடுமைப்படுத்தக் கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி நேற்று முன்தினம் எகிப்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

மத கோஷங்களை எழுப்பி இவ்வமைப்பு சட்டத்தை மீறியதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது.

முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பை அரசு தடைச் செய்திருந்த பொழுதிலும், அவ்வமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை கடந்த தேர்தலில் களத்தில் இறக்கியிருந்தது. பாராளுமன்றத்தில் 5 இல் ஒருபகுதி உறுப்பினர்கள் இவ்வமைப்பைச் சார்ந்தவர்களாவர். இவ்வமைப்பின் வேட்பாளர்களின் பேரணி நடந்த பல இடங்களிலும் மோதல் நடந்தது.

முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து களத்தில் இறங்கிய மக்கள் கூட்டத்தை தடுக்க பாதுகாப்பு படையினர் முயன்றது மோதலுக்கு காரணமானது.

2000 பேர் பங்கேற்ற ஒரு பேரணியை கலைப்பதற்கு 50 ட்ரக் போலீசார் களத்தில் இறங்கினர். அவர்கள் கண்ணீர் புகையை மக்கள் கூட்டத்தின் மீது பிரயோகித்தனர்.

தேர்தலை முறியடிக்க ஆட்சியாளர்கள் முயல்வதாக முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. மக்களை பீதிவயப்படுத்தி தங்களை ஆதரிப்பதை தடுப்பதற்கு அரசு முயல்வதாக அவ்வமைப்பின் வேட்பாளர்களில் ஒருவரான கமால் ஷைஹாதா கூறுகிறார்.

அரசுக்கெதிராக பேசுபவர்கள் எவராகினும் அவர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கு அரசு முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்ததுபோல் மக்களுக்கு வாக்களிக்க முடியாத சூழல் உருவாகக் கூடாது என ஆம்னஸ்டி அழைப்பு விடுத்துள்ளது.

செய்தி:தேஜஸ்

Related

iqwaan 6803404370852137063

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item