கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்வி தினத்தை கொண்டாடியது

சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாதின் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி இந்தியாவின் தேசிய கல்வி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பிரபல இஸ்லாமிய அறிஞரும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி தலைவருமான அபுல்கலாம் ஆசாத் 1888 நவம்பர் 11 ஆம் தேதி மக்காவில் பிறந்தார். இந்த தினத்தில் தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் நடத்தும் ’பொதுக் கல்வியை பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வைத்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

கல்வியாளர்களும், மாணவர்களும் தேசத்தின் பொதுகல்வியின் துர்பாக்கிய நிலையைக் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவுச் செய்தனர். இக்கருத்தரங்கில் பேசிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸவ்மன் சதோபாத்யாயா, குடிமக்களுக்கு தரமான இலவசக் கல்வியை அளிப்பதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக பேராசிரியரான ஜானகி ராஜன், சர்வாத் அலி, அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் கென் ஜோன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

கேம்பஸ் ஃப்ரண்ட் டெல்லி தலைவர் அஃப்தாப் ஆலம், தேசிய பொதுச்செயலாளர் அனீஸ்ஸுஸமான், தேசிய தலைவர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 164419709155313870

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item