பாளையங்கோட்டையில் எஸ்.பி அலுவலகம் நோக்கி த.மு.மு.க.பேரணி

கடந்த 2000ம் ஆண்டு புளியங்குடி தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், ஏர்வாடி அசன் ரபீக் மரணத்தில் உண்மை நிலையை அறிந்திட சி.பி.சி.ஐ.டி.விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும், நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற்றிடக் கோரியும் த.மு.மு.க.சார்பில் 30.10.2010 சனிக்கிழமை அன்று நெல்லை எஸ்.பி அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு ம.ம.க. மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது  தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.

நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், கிழக்கு மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக்,  ம.ம.க.கிழக்கு மாவட்டச் செயலாளா; .ரசூல் மைதீன், மேற்கு மாவட்டச் செயலாளார் புளியங்குடி செய்யது அலி, த.மு.மு.க.மாவட்டச் செயலாளர்கள் காசீம் பிர்தௌசி, நயினார் முகம்மது, கிழக்கு, மேற்கு மாவட்ட பொருளாளர்கள் சர்தார் அலிகான்,.சுல்தான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கண்டனப் பேரணி 1500க்கும் மற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி இறுதியில்மாவட்ட காவல் கண்காணிப்பாளாரிடம் மனு அளிக்கப்பட்டது.

நன்றி : TMMK.IN - Koothanallur Muslims

Related

TMMK 6042194761245195037

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item