ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும்: NCHRO

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) வாபஸ்பெற வேண்டும் என்ற நீதிபதி பி.பி.ஜீவன்ரெட்டி கமிட்டியின் சிபாரிசை நடைமுறைப்படுத்த வேண்டும் என டெல்லியில் நடத்தப்பட்ட கறுப்புச் சட்டங்களுக்கெதிராக பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா-வின் மனித உரிமை அமைப்பான "தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு" (NCHRO) நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது எனவும், கஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்த சட்டம் அமுலில் இருப்பதால் ராணுவ ஆட்சிக்கு காரணமாகிறது. இச்சட்டம் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதா? என்பதைக் குறித்து கேள்வி எழுப்பி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தையும்((UAPA) N.I.A சட்டத்தையும் உடனடியாக வாபஸ்பெற வேண்டும். புலனாய்வு ஏஜன்சிகள் இச்சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இச்சட்டங்களில் சட்டப்பிரிவுகள் இல்லை. புலனாய்வு ஏஜன்சிகள் மீது அரசிற்கு எவ்வித கட்டுப்பாடுமில்லை. வகுப்புக் கலவரங்களை தடைச்செய்யும் மசோதாவில் உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் யாருக்கு? என்பதுக் குறித்து தெளிவுப்படுத்தும் பிரிவுகள் தேவை.

கலவரத்தை தடுப்பதில் தோல்வியேற்பட்டால் அதற்கு பொறுப்பான அதிகாரிகளை தண்டிக்கும் விதமான பிரிவுகளும் அச்சட்டத்தில் தேவை.பாதுகாப்பின் பெயரால் மக்களை பீதிவயப்படுத்த பல கறுப்புச் சட்டங்கள் புதிய பெயர்களில் உருமாற்றிக்கொண்டு வருகின்றது அரசு.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள சித்திரவதை தடைச்சட்டம் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகாரிகளையே பாதுகாக்கிறது. மனித உரிமைகளை உறுதிச் செய்யும்விதமாக அதில மாற்றம் செய்யவேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான நார்கோ அனாலிசிஸ், போலிக்ராஃப் டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகளை உடனடியாக நிறுத்தவேண்டும். இவ்வாறு கருத்தரங்கில் கருத்துக்கள் எடுத்துவைக்கப்பட்டன. இக்கருத்தரங்கில் மனித உரிமை ஆர்வலர்களான மனிஷா சேதி, ஜான் தயாள், நரேந்திர மொஹந்தி, வழக்கறிஞர் கார்த்திக் நவயான், பேராசிரியர் பாபுசிங் துகியா, வழக்கறிஞர் மார்கோஸ்,வழக்கறிஞர் என்.எம்.சித்தீக், ரெனி ஐலின் ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினர்.டெல்லியின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சார்ந்த மாணவர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். 
 
KOOTHANALLUR 

Related

pfi 1291249667539819342

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item